உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

51

பிரதிமை உருவங்களில் பல்லவ அரசர் உருவங்கள் பழைமை வாய்ந்தவை. மாமல்லபுரத்து (மகாபலிபுரம்) வராகப்பெருமாள் குகைக் கோயிலில் இருக்கிற சிம்ம விஷ்ணுவும் அவன் மனைவியரும் ஆகிய பிரதிமை உருவங்களும், அதே இடத்தில் உள்ள மகேந்திர வர்மனும் அவன் மனைவியரும் ஆகிய பிரதிமையுருவங்களும், தருமராச இரதம் என்று பெயர் வழங்கப்படுகிற அத்யந்தகாம பல்லவேசுவரக் கோயிலில் உள்ள நரசிம்மவர்மன் பிரதிமை யுருவமும், அர்ச்சுனன் இரதம் என்னும் பாறைக்கோயிலில் உள்ள சில பல்லவ அரசர் அரசிகளின் பிரதிமை யுருவங்களும் பல்லவ

அரசர்களுடையவை.

சோழர் பிரதிமைகள்

பஞ்சலோகத்தினாலே பிரதிமையுருவங்களைச் செய்யும் வழக்கம், பிற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோயில் சாசனம் ஒன்று, மேற்படி கோயில் அதிகாரி யாயிருந்த ஆதித்தன் சூரியன் என்னும் தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் அக்கோயிலிலே ராஜ ராஜசோழன், அவன் அரசி உலக மாதேவி ஆகிய இருவருடைய செப்புப் பிரதிமை யுருவங்களைச் செய்து வைத்த செய்தியைக் கூறுகிறது. அது வருமாறு:-

"ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார்க்கு ஸ்ரீ கார்யஞ் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் யாண்டு இருபத்தொன்பதாவது எழுந்தருளுவித்த செப்பு பிரதிமங்கள்......

வரை

وو

"பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உசரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த பெரிய பெருமாள் பிரதிமன் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய்விரலே இரண்டுதோரை உசரத்து பத்மம் ஒன்று. இதனொடுங்கூடச் செய்த ஒன்பதிற்று விரற் சமசதுரத்து ஐய்விரலே ஆறுதோரை உசரத்து பீடம் ஒன்று.”

"இருபத்து இருவிரலே இரண்டு தோரை உசரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவித்த இவர் நம்பிராட்டியார் ஒலொகமா தேவியார் பிரதிமம் ஒன்று. இவர் எழுந்தருளி நின்ற ஐய் விரல் உசரத்து பிரதிமம் ஒன்று. இதனோடுங்