உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இவ்வாறெல்லாம் புகழ்கின்றனர். கற்பனை செய்யுந்திறமை காவியப் புலவருக்கு மட்டுந்தான் உண்டு என்று கருத வேண்டா. ஓவியப் புலவருக்கும் கற்பனை செய்யும் ஆற்றல் நிறைய உண்டு. சிற்பிகள் தமது கற்பளை யாகச் செய்தமைத்த தாமரைப் பூக்களில் பலவகை உண்டு. சிற்பக் கலைஞர்கள் தாமரைப் பூக்களை எவ்வாறெல்லாம் கற்பித்துக் கல்லில் அழகுறச் செதுக்கியிருக் கிறார்கள் என்பதைக் கோவில் களிலும் வேறு இடங்களிலும் காணலாம். இங்குத் தாமரைப் பூக்களின் ஓவியங்கள் சிலவற்றை மட்டும் காட்டுவோம். (1) 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்பு. கி. பி. ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் ஒருமண்தட்டில் வரையப்பட்டுள்ள தாமரை. இது அண்மையில் புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்னும் இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பொருள் களில் ஒன்று. (2) இது கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் குகைக் கோயில் தூண்களில் செதுக்கி யமைக்கப்பட்ட தாமரைப் பூ உருவம், (3) இவை மகேந்திரவர்மன் மகன் நரசிம்ம வர்மன் (மாமல்லன்) காலத்தில் மகாபலிபுரத்து வராக மண்டபத்தில் வரையப்பட்டுள்ள தாமரையின் ஓவியங்கள். (5) இது காஞ்சி காமாட்சியம்மன் கோவில், சுவர்கண காமாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் மண்டபத்தின் தரையில் உள்ள தாமரைப்பூவின் சிற்ப ஓவியம். (6) இது வைகைவூர் திருமலையில் குகையில் உள்ள தாமரைப் பூவின் வர்ண ஓவியப்படம். (7) இது காஞ்சிப் பௌத்த ஸ்தூபியில் உள்ள ஒரு கற் சிற்பம். (8) இது அமராவதி ஸ்தூபியில் உள்ள தாமரைப் பூ சிற்பங்களில் ஒன்று.

சிற்பக் கலையில் மலர்ந்த தாமரைப் பூக்கள் இவ்வளவுதான் என்று எண்ண வேண்டா. நூற்றுக்கணக்கான தாமரைப் பூக்கள் வெவ்வேறு அமைப்பில் சிற்பக்கலையிலும் ஓவியக்கலையிலும் காணப்படுகின்றன. அவற்றில் எட்டுச் சிற்பங்களை மட்டும் இங்குக் காட்டினோம். நீங்கள் ஏதேனும் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிற்ப உருவங்களை தேடிப் பாருங்கள்.