உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பிறவிகளில் அப்பதவிகளை அடைய முடியாது என்று அந்தமத நூல்கள் கூறுகின்றன. எனவே, மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலையடைந்த புத்த அருகத் தெய்வங்களுக்கு இரண்டு கைகள் தானே இருக்க வேண்டும்? மானசாரம் முதலிய சிற்பக்கலை நூல்களும், ஜினனுக்கும் (அருகக் கடவுளுக்கும்) புத்தனுக்கும் இரண்டு கைகளும் இரண்டு கண்களுத்தான் அமைக்க வேண்டும் என்று கூறுகின்றன.

பௌத்த ஜைன மதங்களின் சிறு தெய்வங்களுக்கு மட்டும், நான்கு எட்டுக் கைகளை ஏன் கற்பித்தார்கள் என்பது விளங்க வில்லை. புத்தர் அருகர்களைப் போலவே இச்சிறு தெய்வங்களுக்கும் இரண்டு கைகள் இருந்தால் பெரிய தெய்வங்களுக்கும் சிறு தெய்வங்களுக்கும் வேற்றுமை தெரியாமற் போகும் என்பதைக் கருதிப், பிரித்தறிவதற்காக இவ்வாறு கற்பித்தார்கள் பேரலும்.

சைவ

வைணவ பௌத்த சமண சமயங்களின் சிற்ப உருவங்களிலும் ஒவியப் படங்களிலும் இத்தகைய வேறுபாடுகள் காணப் படுகின்றன. நமது நாட்டுச் சிற்பக்கலை ஓவியக் கலைகளை ஆராய்வோர் இவற்றையெல்லாம் அறியவேண்டும். நமது நாட்டிலே கணக்கற்ற அழகான சைவ வைணவ பௌத்த ஜைன உருவச் சிலைகள் கல்லிலும் செம்பிலும் அமைக்கப்பட்டுள்ளன. அவை யெல்லாம் அங்கங்கே பல பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றைக் காணும்போது அவை நமது உள்ளத்திலே ஏதேதோ உணர்ச்சிகளை ஊட்டுகின்றன. சிற்பக் கலைச் செல்வங்களை பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கவேண்டும். உடைத்து போன அல்லது சிதைந்துபோன சிற்பங்களாக இருந்தாலும் அவற்றைப் போற்றி வைக்க வேண்டும்.

இக்காலத்தில் சிற்பக்கலை ஆர்வமும், அக்கலை ஆராய்ச்சியும் பெரும்பான்மையோருக்கு இல்லை. நூற்றில் தொண்ணுற்றொன்பது பேருக்கு இல்லையென்று சொல்லலாம். சிற்பக்கலையைச் சிறப்பாக வளர்த்த நம் நாட்டின் இன்றைய நிலை இது! புத்த உருவச்சிலைக்கும் ஜைன உருவச்சிலைக்கும் வேற்றுமை தெரியாதவர்கள், கணக்கற்றவர் நமது நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்! படித்தவர்களிலேயே இப்படி என்றால், வரலாறே தெரியாத படிக்காத பாமரர்களைப் பற்றிக் கூற வேண்டிய தில்லையே.