உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

/67

உருவம் இல்லாத கடவுளுக்கு உருவத்தைக் கற்பித்த சைவ வைணவப் பெரியார்கள் அந்த உருவத்துக்குக் குறியீடு கொடுத்து உருவத்தைக் கற்பித்தார்கள். இதனால், இந்த உருவங்கள் மட்டுமே கடவுள் என்பது பொருள் அன்று. இந்த உருவங்கள் மூலமாகக் கடவுளின் அருவ உருவத்தை ஒருவாறு அறியலாம் என்பதே கருத்தாகும்.

ஆகாயத்தைக் கடவுளின் உடம்பாகக் கற்பித்தபடியால் பெரியோர்கள் அதற்கு ஏற்பத் திசைகளைக் கற்பித்தார்கள்; திசைகள் நான்கு அல்லது எட்டு இருப்பதால், அந்த உருவங்களுக்கு நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளைக் கற்பித்தார்கள். இதையறிந்துகொண்டால், நான்கு எட்டுக் கைகள் இருப்பதைக் கண்டு அறிவுடையோர் குறை கூற மாட்டார். மாறாக, ஐயமுறுபவர்கள் அதில் பொதிந்துள்ள உண்மைக் கருத்தைக் கண்டு மகிழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.