உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

65

பல கைகளைக் கற்பித்தார்கள் என்பதே வினா. அதற்கு விடை கூறுவோம்.

உருவம் இல்லாத கடவுள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார் என்றும், உலகத்தைக் கடந்து அப்பாலும் பரவியிருக்கிறார் என்றும் கடவுளைப் பற்றிச் சைவரும் வைணவரும் நம்புகின்றனர். அப்படிப் பட்ட கடவுளை வணங்குவதற்காக குறியீட்டுடன் உருவங்கள் அமைக்கப்பட்டன. (குறியீடு = Symbolism)

அந்தக் குறியீடு என்ன? உலகத்தைக் கடவுளின் பாதமாகவும், உலகத்துக்கு அப்பாற் பட்ட ஆகாயத்தைக் கடவுளின் உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும் ஆகாயத்துக்கு அப்பால் அவருடைய முகம் இருப்பதாகவும், சூரிய சந்திரர் அவருடைய கண்களாகவும் பெரியோர்கள் கற்பித்துக்கொண்டார்கள்; கற்பித்துக்கொண்ட படி யே கடவுளுக்கு உருவத்தை அமைத்துக்கொண்டார்கள். மனித உருவம் போலவே கடவுள் உருவத்தையும் அமைத்துக்கொண்ட போதிலும், கடவுள், மனிதனுக்கும் மேம்பட்ட ஆற்றலுடையவராய் உலகத்தைக் கடந்தும் இருக்கிறார் என்பதைக் காட்டுவதற்காகவே, கைகளையுடையவராகக் கற்பிக்கப்பட்டார். ஆகாயத்தை உடம்பாகக் கற்பிக்கப்பட்ட கடவுளுக்குத் திசைகள் கைகளாகக் கற்பிக்கப்பட்டன. திசை நான்கு அல்லது எட்டு என்று அறியப்படுகிறபடியால், கடவுளுக்குத் திசையாகிய கைகள் நான்கு அல்லது எட்டு என்று கற்பிக்கப்பட்டன. சிவன் விஷ்ணு உருவங்களுக்குப் பல கைகள் அமைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம். எனவே, சிவன் உருவமும் விஷ்ணுவின் உருவமும் குறியீடுகளால் அமைக்கப் பட்ட உருவங்கள் (Symbolism) என்பது தெளிவாகின்றது.

பல

நற்றிணை என்னும் சங்கத் தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், இந்தத் தத்துவத்தை (உண்மையை) மனத்தில் கொண்டு, திருமாலுக்கு வணக்கங் கூறியுள்ளார். அச்செய்யுள் இது:

66

“மாநிலம் சேவடி யாகத் தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கை யாம்,

விசும்புமெய் யாத் திசைகையாகப்

பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே.

99