உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

போது, அது ஒரு சிறு துளிதான். ஆனால், அந்தப் பெருவெள்ளம் சிவபெருமானுடைய சடைப் புரியில் இறங்காமல் மற்றப்புறமாக இறங்கினால், பூமிக்குக் கேடு விளையும் அன்றோ? ஆகவே, வெள்ளம் வேறுபக்கம் விழாமல் சடைப்புரியிலே விழும்படி செய்வதற்குச் சிவபெருமான் நாயின் வேடங்கொண்டு, கங்கை வேறுபக்கம் பாயாதபடியும் புரிசடையில் விழும்படியும் செய்தார்.

என்னை?

கங்கை மிகத் தூய்மையானது; புனிதமானது. இந்து மதக் கொள்கைப்படி நாய் தூய்மையற்ற, தீண்டத்தகாத விலங்கு. நாய் நக்கிவிட்டால் கங்கையின் புனிதத்தன்மை கெட்டுப்போகும். அவ்வாறு நேராதபடி, நாய் தன்னைத் தீண்டாதபடி பார்த்துக் கொள்வது கங்கை யின் கடமை. நாயினால் தீண்டப்பட்டுப் புனிதத் தன்மை கெடுவதை தவிட, சிவபெருமானின் புனிதமான சடைப் புரியில் தங்கி மேலும் தூய்மையடைய கங்கை விரும்பியது. அதனால் சிவபெருமானின் புரிசடையில் அது தங்கிவிட்டது. கங்கை நிலத்தில் விழாதபடி தடுக்கவே. சிவபெருமான் கங்காதர மூர்த்தத்தின்போது நாய் வேடங்கொண்டார் என்பது இதனால் விளங்குகிறது எனலாம்.

இந்தக் கருத்து பொருந்துமானால் ஏற்றுக்கொள்ளலாம். எப்படியானாலும் இந்தக் கங்காதர சிற்ப வடிவம், ஏனைய கங்காதர மூர்த்தங்களைவிடப் புதுமையும், சிறப்பும் உடையது என்பதில் சிறிதும் ஐயமில்லை. காலப்பழமையினால் பிற்காலத்தில் பழுதடைந்த இந்தச் சிற்பத்தைத், திறமையாகப் பழுது பார்க்கவில்லை. அதனால், இந்தச் சிற்பம் பழைய அழகு கெட்டுக் காணப்படுகிறது, பழுதுபடாமலிருந்த காலத்தில், இந்தச் சிற்ப உருவம் எத்துணைப் பேரழகுடன் விளங்கியிருக்குமோ!

1 வடமலையப்ப பிள்ளை

2.

3.

4.

5.

6.

திருநாவுக்கரசு நாயனார்

99

மாணிக்கவாசகர்

இண்டைமாலை என்பது

அடிகுறிப்புகள்

மச்சபுராணம்.
உத்தரகாண்டம், 30ஆவது இருபத்தஞ்சு பேரமுரைத்த அத்தியாயம், செய்யுள் 65.
தேவாரம் 1, சிருச்சாய்க்காடு-7.
தேவாரம் 1, திருசேறை-4.
திருவாசகம், திருச்சாழல்-7.
தலையச்சுற்றி அணியும் மாலை.

7. Archaeological Survey of India : South Indian Inscriptions, Vol, Ill. No. 69.

7.

8.

மயிலை சீனி. வேங்கடசாமி

சாசனச் செய்யுள் மஞ்சுரி, 1959, பக். 18.