உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

7

73

வரலாற்று ஆராய்ச்சிக்காக, நான் தென் இந்திய சாசனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஒரு சாசனத்தில் என்னுடைய கேள்விக்கு விடை விடை கண்டேன்.7 வட ஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் முதல் பிராகாரம், மேற்குப் பக்கத்துச் சுவரில் இந்தச் சாசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது அகவற் பாவாலான சாசனம். இதை என்னுடைய சாசனச் செய்யுள் மஞ்சரியில் அச்சிட்டிருக் கிறேன்.' இந்த நீண்ட அகவற்பாவில் நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் இங்குக் காணலாம்:

கண்ணுதற் பெருமான்

ஆதிநாதன் நாய் வேடங் கொண்டு பாய்புனற் கங்கை ஆயிர முகங்கொண்டு ஆர்த்தெழு மன்னாள் ஏற்றுக் கொண்ட திருந்திய பிறைமுடி யருந்தவச் சடாதரர்.

இந்தச் செய்யுளிலே, சிவபெருமான் கங்கையைத் தம்முடைய சடையில் ஏற்றுக்கொண்டபோது நாய் வேடமுங்கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, இந்த நாய் உருவம் கங்காதர மூர்த்ததின் ஒரு கூறு என்பது தெரிகிறது. கங்காதர மூர்த்தத்தில் நாய் இடம் பெற்றிருப்பதற்கு விடை தல சிவபெருமான் ஏன் நாய் உருவங் கொண்டார்? கங்கையை ஏந்திக் கொண்டதற்கும் நாய் உருவங் கொண்டதற்கும் என்ன பொருத்தம்? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. என்னுடைய உய்த்துணர்வின்படி இதற்குப் பொருள் கற்பிக்கிறேன். இந்தப் பொருள் பொருத்தமாக இருந்தால் வாசகர் ஏற்றுக்கொள்ளலாம்.

கங்கை பெருவெள்ளமாகப் பாய்ந்து, தன்னுடைய ஆற்றலி னாலும் வேகத்தினாலும் பூமியில் விழுந்து 'தரணியைப் பெருங் கேடாக்க’ எண்ணிற்று. மனித ஆற்றலைப் பல்லாற்றானும் ஐம்பெரும் பூதங்களின் ஆற்றல் விஞ்சியதாகும். ஆனால், அவற்றின் ஆற்றலைக் கடவுளின் ஆற்றலோடு ஒப்பிடுகின்றபொழுது மிகச் சிறியதாகும். ஆகையினால்தான், கங்கையின் ஆற்றலைக் கடவுள் பொருட் படுத்தாமல் சிறு நீர்த்துளியாகத் தம்முடைய சடைமுடியின் ஒரு சிறு புரியில் ஏற்றுக்கொண்டார். ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றான அந்தப் பெருவெள்ளத்தின் ஆற்றலைக் கடவுளின் ஆற்றலோடு ஒப்பிடும்