உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

79

இவ்வு வ்வாறு கடவுளின் உண்மை தத்துவங்களைப் புராணக் கதைகளாகவும் சிற்ப வடிவங்களாகவும் நம்முடைய முன்னோர் அமைத்துக் காட்டியுள்ளனர். இந்தப் புராணக் கதைகளும் சிற்ப வடிவங்களும், மேற் போக்காகப் பார்க்கிறவர்களுக்கு, பொருத்த மற்ற பொய்க் கதைகளாகவும் விளங்காத விசித்திர உருவங்களாகவும் காணப்படுகின்றன. அவர்களுக்கு இவற்றின் உண்மைப் பொருள் விளங்குவதில்லை. ஆனால் இவற்றின் உண்மைத் தத்துவங்களை அறியும்போது இவை வ மிக உயர்ந்த சிறந்த கருத்துகளைத் தெரிவிக்கின்றன என்பதையுணர்கிறோம். இலிங்கோத்பவ மூர்த்தத்தில் எவ்வளவு உயர்ந்த தத்துவம் அடங்கியிருக்கிறது பாருங்கள்.