உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலையில், இலிங்கோத்பவ மூர்த்தியைக் கூறுகிறார்.

66

என்றும்,

66

66

"கடவுள் இருவர் அடியும் முடியும்

காண்டல் வேண்டக் கனல் பிழம்பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி!

'இனையன் ஆகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு வாகி ஆழத்து

அடுக்கிய ஏழும் எடுத்தன னெடுத்தெடுத்து ஊழியூழி கீழுறக் கிளைந்துங்

காண்பதற் கரியநின் கழலும்;

99

"நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய பொன்னிறக் கடவுள் அன்னமாகிக்

காண்டி லாத நின்கதிர் நெடுமுடியும்.

என்றும், திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில்.

"வலம்புரி நெடுமால் ஏனம் ஆகி நிலம்புக்கு ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி யடியவர் பச்சிலை யிடினும்

66

முத்தி கொடுத்து முன்னின் றருளித்

திகழ்ந்துள தொருபால் திருவடி.

99

“நான்முகம் கரந்த பால்நிற அன்னம்

காணா வண்ணங் கருத்தையுங் கடந்து சேணிகத் துளதே, ஒருபால் திருமுடி.

""

என்றும் விளக்கிக் கூறுகிறார். மாணிக்கவாசகப் பெருமான் தாம் அருளிய திருவாசகத்தில் சோதிவடிவமான முழுமுதற் கடவுளை,

"தேவர்கோ அறியாத தேவதேவன்

செம்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவார் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி

மூதாதை மாதாளும் பாகத் தெந்தை

யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான்.

என்று கூறுகிறார்.

99