உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

77

என்பதும் அழியாப் பரம் பொருளாக இருக்கிறான் என்பதுதான் இந்தப் புராணக் கதையும் இலிங்கோத்பவ மூர்த்தமும் தெரிவிக்கிற உண்மையாகும்.

க்

இந்த அழகான உண்மையை இனிமையான சிற்ப உருவ மாகவும் கதையாகவும் நமது முன்னோர்கள் அமைத்துத் தந்திருக் கிறார்கள். கைதேர்ந்த சிற்பிகள் இலிங்கோத்பவ மூர்த்தத்தின் உருவத்தை அழகான சிற்பவடிவமாக அமைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்ப உருவங்களைச் சிவன் கோயில்களிலே நாம் பார்த்து மகிழலாம். பார்த்து மகிழ்வதோடு அல்லாமல் இந்தச் சிற்ப உருவம் நமக்குக் கற்பிக்கிற, 'கடவுள் அந்தமும் ஆதியும் இல்லாத சோதி வடிவ மானவன்' என்னும் உண்மையையும் உணர்கிறோம்.

இந்த அழகான தத்துவ உண்மையைப் பெரியோர்கள் அழகான இனிமையுள்ள செய்யுள்களினால் விளக்கிக் கூறியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். திருநாவுக்கரசு சுவாமிகள், இலிங்கோத்பவ மூர்த்தத்துக்கு 'இலிங்க புராணம்' என்னும் தேவாரப் பதிகத்தைப் பாடியுள்ளார். திருமாலும் பிரமனும் அடிமுடிகளைக் காணச் சென்றதை வெகு அழகாகக் கூறுகிறார். அப்பதிகத்தை முழுவதும் படித்து இன்புறலாம். இங்கு அப்பதிகத்தின் சில அடிகளை மட்டும் மேற்கோள் காட்டுகிறோம்.

66

66

'சொக்கணைந்த சுடரொளி வண்ணனை

மிக்ககாண லுற்றாரங்கிருவரே.

உ லக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச் செலவு காண லுற்றாரங் கிருவரே. "ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை

மெய்யைக் காணலுற்றா ரங்கிருவரே. “உரம் பெருந்திய ஒளிநிற லண்ணனை

66

நிரம்பக் காணலுற்றா ரங்கிருவரே. "அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்

66

கிண்டிக் காணலுற்றா ரங்கிருவரே.

'செங்கணானும் பிரமனுந் தம்முளே எங்குத்தேடித் திரிந்தவர் காண்கிலர்

99

"இலங்குற்றேன்” என்றிலிங்கத்தே தோன்றினான். பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.'