உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்றவை

1. மாமல்லபுரக் கொற்றவை

மாமல்லபுரத்தில் கோடிக்கால் மண்டபம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற குகைக்கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட காளிகோயில் என்று கூறினோம். இக்கோயிலில் இருந்த காளியின் உருவச்சிலை ஊரிலேயுள்ள ஒரு மேடைமேல் மற்ற உருவச்சிலை களுடன் இப்போது வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினோம். இந்த உருவத்தின் இடதுகை ஒன்று காணப்பட வில்லை; உடையுண்டது போலும். உடைபட்ட உருவத்தை வழி படக்கூடாது ஆகையால் இந்தக் காளி உருவத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள் போலும்.'

1

இந்தக் காளி, கொற்றவை என்றும் காடுகிழாள் என்றும் கூறப்படுகிறாள். இந்தக் கொற்றவையின் உருவம் புதுமையானது; அருமையானது. இதுபோன்ற கொற்றவையின் உருவத்தை நமது நாட்டிலே-ஏன்? உலகத்திலேயே-, வேறெங்கும் காணமுடியாது. இது பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட மிகப் பழைய உருவம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கொற்றவை என்றால் வெற்றி மடந்தை என்பது பொருள். (கொற்றம் = வெற்றி, அவ்வை = உயர்ந்தவள்) பார்ப்பவரை அச்சுறுத்துகிற இதன் அமைப்பு போற்றத்தக்கது. வீரம், பெருமிதம், உறுதி, ஆற்றல், வெற்றி முதலிய இயல்புகள் எல்லாம் இவ் வுருவச் சிலையில் காட்சியளிக்கின்றன.

G

=

இடதுகாலை மடக்கி வலதுகாலைத் தொங்கவிட்டுச் சுகாசன நிலையில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்து, வீரமும் வெற்றியும் கண்களில் விளங்கப் பெருமிதமும் உறுதியும் வாயின் அமைப்பிலே தோன்ற நடுத்தர வயதுள்ள வீர மங்கையாக அமர்ந்திருக்கிறாள் இக்கொற்றவை. இரண்டு கோரைப் பற்கள் வெளியே தெரிகின்றன. கட்டாரி தாங்கிய இரண்டு கைகளையும் தன் இரண்டு தொடைகளின் மேல் தாங்கியிருக்கிறாள். மற்றொரு வலது கையில் மணியொன்றை ஏந்தியிருக்கிறாள். (உடைந்துபோய் விட்ட மற்றொரு கையில்