உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

95

கபாலபாத்திரத்தை ஏந்தியிருந்தாள்) இடது காதில் பொற்குழை விளங்க வலது காதில் பிணம் ஒன்று தொங்குகிறது. இடது தோளிலிருந்து மார்பின் வழியாகத் தொங்குகிற பூணூலிலும் தலையோடுகள் காணப்படுகின்றன. தலைமுடியிலும் தலையோடு ஒன்றை அணிந் திருக்கிறாள்.

கடலிலிருந்து உப்பங்காற்றினால் மோதுண்டு வெயிலிலும் பனியிலும் மழையிலும் பல ஆண்டுகளாகக் கிடந்து வருகிற இந்தக் கருங்கல் சிற்பம், நாளுக்குநாள் தேய்ந்து மழுங்கிலருகிற நிலையிலும், வீரச் சுவையை வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கிறது. ஒரு பாறைக் கல்லைச் செதுக்கி அதில் வீரச் சுவையை அமைத்துக் காட்டிய அந்தச் சிற்பாசாரியர் யார்? அவர் பெயர் என்ன? அவர் வரலாறு யாது? ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவர் அமைத்துக் கொடுத்த இந்தச் சிற்ப உருவம் நமது கண்ணையும் மனத்தையும் கவர்ந்து உணர்ச்சி யளிக்கிறது. அரசாங்கக் காட்சிச்சாலையில் பாதுகாக்கப்பட வேண்டிய கலைச் செல்வமன்றோ இது? காட்சிச்சாலையில் இடம்பெற வேண்டி இந்தச் சிற்பம் ஏன் ஊரின் ஒதுக்கிடத்தில் புறக்கணிக்கப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்து அழிந் துவருகிறது?

6

இந்த உருவம் ஒருகாலத்தில் பூசைசெய்து வணங்கப்பட்ட தென்பதில் ஐயமில்லை. இவ்வுருவம் கருக்கிலமர்ந்தாள் என்னும் பெயர் பெற்றிருந்தது எப்படி என்றால், கூறுவேன். மகாபலிபுரத்தில் ஊரையடுத்துக் கருக்கிலமர்ந்தாள் என்னும் சிறிய கோயில் இருக்கிறது. இது கிராமதேவதையின் கோயில் இந்தக் கோயிலில் இருக்கிற கருக்கிலமர்ந்தாள் உருவமும் மேலே கூறப்பட்ட கொற்ற வையின் உருவமும் ஒரேமாதிரியாக உள்ளன. இரண்டுக்கும் காணப்படுகிற வேறுபாடு என்னவென்றால், கொற்றவையின் வலதுபுறத்துக் கையொன்று உடைந்துபோய் விட்டது. கோயிலில் உள்ள கொற்ற வையின் வலதுகை உடைபடாமல் கபால பாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கிறது. நமது கொற்றவை ஏறக்குறைய இரண்டரையடி உயரம் உள்ளது. கோயிலிலுள்ள உருவம் சுமார் ஒர் அடி உயரம் உள்ளது. இந்த வேறுபாடுதவிர மற்றப்படி எல்லா அமைப்புக்களும் இரண்டு உருவங்களிலும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. ஆனால், நமது சிற்பத்தில் காணப்படுகிற வீரச்சுவை முகபாவம் கோயிலிலுள்ள சிற்பத்தில் காணப்படவில்லை. எட்டு வகைச் சுவைகளில் ஒன்றாகிய