உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

வீரச்சுவையைக் கல்லிலே அமைத்துக் காட்டுவது அருமையிலும் அருமையன்றோ?

66

சைவ வைணவ சமயக் கலகங்கள் உண்டான பிற்காலத்திலே 'கோடிக்கால் மண்டபம்." என்னும் குகைக் கோயிலிலே இருந்த இந்த உருவம் பின்னப்படுத்தப்பட்டது. கபாலமேந்திய க

வலதுகை உடைபட்டுப்போன படியினாலே, பின்னப்பட்ட இவ்வுருவம் வழிபாட்டிற்குத் தகாததாயிற்று. ஆகவே, இதைக் கொண்டுவந்து ஊரின் ஒருபுறத்தில் வைத்துவிட்டுப், புதிய உருவத்தை அமைத்துப்

புதியகோயிலில் வழிபடுகின்றனர். அதுதான் இப்போது மகாபலிபுரத்தில் உள்ள கருக்கில் அமர்ந்தாள் கோயில் என்பது. பின்னப்பட்ட கொற்றவை இருந்த குகைக்கோயில் இப்போது வெறுங்கோயிலாக இருக்கிறது.

6

2

காஞ்சிபுரத்திலும் கருக்கில் அமர்ந்தாள் கோயில் ஒன்று உண்டு.2 பல்லவர் தலைநகரமான காஞ்சியிலும் துறைமுகப் பட்டினமான மாமல்லபுரத்திலும் கருக்கில் அமர்ந்தாள் கோயில்கள் இருப்பதை நோக்கும்போது, கருக்கில் அமர்ந்தாள் என்னும் பெயருடைய கொற்றவை பல்லவர்களின் குலதெய்வம் என்று கருதவேண்டி யிருக்கிறது. அடிக்கடி போர்செய்துவந்த பல்லவ அரசர்கள், வீரத்திற்கும் வெற்றிக்கும் கடவுளாகிய கொற்றவையை வழிபட்டு வந்தனர் என்பதற்கு அடையாளமாக, அவ் அரசர் அமைத்த கோயில்களில் கொற்றவையின் உருவங்களைக் காண்கிறோம். ஆனால், மற்றக் கொற்றவையின் உருவ அமைப்புக்கும் இங்குக் குறிப்பிட்ட கொற்றவையின் உருவத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. இங்குக் கூறப்பட்ட கொற்றவையின் உருவம் மிகப் பழைமையானது. மகேந்திரவர்மன் காலத்தில் இது அமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

II. சிங்கவரத்துக் கொற்றவை

தென் ஆர்க்காடு மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் (சிங்கபுரம்) என்னும் ஊரில் இருக்கும் குகைக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இக் குகைக்கோயில் இப்போது அரங்கநாதர் கோயில் என்று வழங்கப்படுகிறது. ஆனால், இது முதலில் வராகப்பெருமாள் கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று இங்குள்ள ஒரு சாசனத்தைக்கொண்டு கருதவேண்டியிருக்கிறது.