உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

93

66

'தாதுமலர் தண்டிக்குக் கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ.

(திருவாரூர்த் திருத்தாண்டகம். 10.)

"வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார் தாமே மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே.

(திருப்பழனம் திருத்தாண்டகம். 2)

1.

2.

3.

4.

÷ ம் ம்

5.

6.

முகப்புப் படம் 3 பார்க்க. Bas relief

அடிக்குறிப்புகள்

மகாபலிபுரத்தில் மிகப் பிற்காலத்திலே, விஜய நகர அரசர் காலத்திலே, சைவ வைணவக் கலகம் நடைபெற்றதாகத் தெரிகிறது. வைணவர் மகாபலிபுரத்தை வைணவத்திருப்பதியாக்க முயன்றனர். இங்குள்ள, மகேந்திரவர்மன் காலத்துக் குகைக்கோயில் கருப்பக்கிருகங்களை உடைத்து அதற்கு தர்மராச மண்டபம் என்றும், மற்றொரு குகைக்கோயிலி லிருந்த அழகான புடைச் சிற்பங்களை உருத்தெரியாமல் செதுக்கிப்போட்டு அதற்கு இராமாநுச மண்டபம் என்றும், அத்யந்தகாம பல்லவேச்சுரம் என்று பெயரிருந்த கோயிலைத் தர்மராச இரதம் என்றும் அது போலவே, மற்றக் கோயில்களுக்கு அர்ச்சுனன் இரதம், பீமன் இரதம், நகுல சகாதேவ இரதங்கள் என்றும், கொற்றவைக் கோயிலுக்குத் தீரௌபதி இரதம் என்றும், வாமாங்குச என்னும் குகைக் கோயிலுக்குக் கொடிக்கால் மண்டபம் என்றும், அங்குள்ள சிறு எரிக்குக் கோனேரி என்றும் (திருவேங்கடத்தில் ஒரு கோனேரி இருப்பதுபோல) வைணவப் பெயர்களைச் சூட்டினார்கள். அது போலவே, சகரசாகரர் கதையைக் காட்டுகிற சிற்பத்துக்கு அர்ச்சுனன் தபசு என்று வைணவ பரமாகப் பெயர் சூட்டினார்கள். இந்தச் சரிதங்களை ஆராயாத பாமர மக்கள், பிற்காலத்தில் எற்பட்ட இப் பெயர்களையே இப்போதும் வழங்குகிறார்கள். இதில் அதிசயம் என்னவெனில், அரசினர் ஆர்க்கியாலஜி இலாகா அலுவலர்களில் சிலர், பிற்காலத்தில் ஏற்பட்ட இப்பெயர்களை ஆதிகாலத்திலிருந்தே ஏற்பட்ட பெயர்கள் என்று நம்பிச், சகரசாகரச் சிற்பத்தை அர்ச்சுனன் தபசு என்று நிலை நிறுத்து வதற்கு முயற்சி செய்வதுதான். மகேந்திரவர்மன் காலத்தில் சமணசமயம் நாடடெங்கும் பரவிச் சைவ வைணவ சமயங்கள் குன்றியிருந்தன என்பதை இந்நூலில் மற்றோர் இடத்தில் விளக்கியுள்ளோம். சமணசமயம் சிறப்புற்றிருந்த அந்தக் காலத்தில் அஜித நாதர் புராணத்தில் உள்ள சகரசாகரர் கதை உலகில் எல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அச் சிற்பத்தை மகேந்திரன் மாமல்லபுரத்தில் அமைத்ததில் வியப்பில்லை.

முகப்புப் படம் 9 பார்க்க.

முகப்புப் படம் 9 பார்க்க.

இந்தச் சிற்பத்தின் விரிவான ஆராய்ச்சியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள "மகாபலிபுரத்து ஜைன சிற்பம்” என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இந்நூலை அச்சிட்டவர் வேதாரணியம் திரு. ஹ. து. அனந்தராஜய்யன் முதலியார் அவர்கள்.