உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

குமாரர்கள் கயிலாய மலைக்கு வந்ததையும், அங்குக் கோயிலைக் கண்டு அதனைச் சூழ்ந்து அகழி தோண்டியதையும், அகழி நீர் பாதலத்திலுள்ள நாகர்களுக்குத் துன்பம் உண்டாக்கவே நாகர்களும் நாகராசனும் சகர குமாரர்களிடம் வந்ததையும், நாகராசன் பார்வையினால் சகர குமாரர்கள் இறந்துபட்டதையும் காட்டுகிறது. குரங்கு பூனை எலி முதலியவை இந்தச் சிற்பத்திற்கு அழகு செய்கின்றன."

நாடு செழிப்புற வேண்டுமானால் நீர்வளம் இன்றியமை யாததாகும். இதையறிந்த மகேந்திரவர்மன் தனது நாட்டில் ஏரிகளை அமைத்தான். காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மாமண்டூர் ஏரியை அமைத்து அதற்குச் சித்திரமேகத் தடாகம் என்று தன் பெயரைச் சூட்டினான். மகேந்திர வாடியில் ஏரி அமைத்து அதற்கு மகேந்திர தடாகம் என்று பெயர் இட்டான். நீரைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது ஊரை அழிக்கும் என்பதையும் அதைக் கட்டுப்படுத்தினால் அதன் மூலமாக ஊர் செழிப்படையும் என்பதையும் விளக்குவதற் காக, மாமல்லபுரத்தில் சகரசாகரர் சிற்பத்தையும் திருச்சிக் குகைக் கோயிலில் கங்காதரமூர்த்தியின் சிற்பத்தையும் மகேந்திரவர்மன் அமைத்தான் போலும். வெள்ளத்தைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிடின், அது அழிவை யுண்டாக்கும் என்பதைக் குறிப்பது மாமல்லபுரத்துச் சகரசாகரர் சிற்பம். (அர்ச்சுனன் தபசு என்று தவறாகக்கூறப்படுகிற சிற்பம்) வெள்ளத்தைக் கட்டுப்படுத்தினால் அழிவு நேரிடாமல் தடுக்கலாம்; அன்றியும் அதனால் நன்மையும் பெறலாம் என்பதைக் குறிப்பது திருச்சிக் குகைக் கோயில் பாறையில் இவன் அமைத்துள்ள கங்காதரமூர்த்தியின் சிற்பம்.

மகேந்திரவர்மன் காலத்தவரான திருநாவுக்கரசு சுவாமிகளும், வெள்ளம் பெருகி நாடு அழியாதபடி சிவபெருமான் கங்கையின் வெள்ளத்தைத் தமது சடையில் ஏற்றுக்கொண்டார் என்று கூறுவது இங்குக் கருதத் தக்கது:-

66

“ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்

ஊழி பலகண் டிருந்தார் போலும்

பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும்

பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்.

(திருவாரூர்த் திருத்தாண்டகம். 10.)