உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

91

பிறந்தார்கள். இந்தப் பிள்ளைகளுக்குப் பொதுப்பெயர் சாகரகுமார் என்பது; அதாவது சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் என்பது பொருள்.

4

சாகர குமரர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு தேச யாத்திரை செய்ய விரும்பிச் சகர சக்கரவர்த்தியின் உத்தரவு பெற்றுப் புறப்பட்டுச் சென்று பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தார்கள். கடைசியாக அவர்கள் கயிலாய மலைக்கு வந்தார்கள். கயிலாய மலையின் மேலே இவர்களின் முன்னோரான பரதச் சக்கரவர்த்தி ஒரு கோயில் கட்டியிருந்தார். அந்தக் கோயிலைக் கண்ட இவர்கள், அக்கோயிலைச் சூழ்ந்து அகழி தோண்ட வேண்டுமென்று விரும்பினார்கள். ஆகவே, தம்முடன் கொண்டு வந்திருந்த நவநிதிகளில் ஒன்றான தண்டரத்தினத்தினால் ஆழமான அகழி தோண்டினார்கள். அந்த அகழி நாகலோகம் வரையில் ஆழ்ந்து இருந்தது. பின்னர், தண்ட இரத்தினத்தின் உதவியினாலே கங்கையாற்றை இழுத்துவந்து அதனை இந்த அகழியிலே பாய்ச்சினார்கள். கங்கையாறு, வெள்ளம் புரண்டு வந்து அகழியில் பாய்ந்து அதை நிரப்பி வழிந்து ஓடியது. கங்கை அகழியில் பாதலம் வரையில் பாயவே, பாதலத்தில் இருந்த நாகர்கள் துன்புற்றார்கள். நாகராசன் சினங்கொண்டு மதயானைபோல வந்து தனது விஷக் கண்களினால் சகர குமாரர்களை நோக்கினான். அந்தப் பார்வையினால், சகர குமாரர்கள் மாய்ந்து சாம்பலாயினர்.

தன் மக்கள் மாண்டுபோனதையும், கங்கை வெள்ளப் பெருக் கால் நாடுகள் அழிக்கப்படுவதையும் அறிந்த சகர சக்கரவர்த்தி தன் பேரனான பகீரதனை அழைத்துத் தண்ட இரத்தினத்தின் உதவியினால் கங்கை வெள்ளத்தை இழுத்துக்கொண்டுபோய்க் கடலில் விடும்படி கூறினான். அதன் படியே பகீரதன் சென்று தண்டஇரத்தினத்தின் உதவியினால் கங்கை வெள்ளத்தை இழுத்துக்கொண்டுபோய் கடலில் பாய விட்டான்.

இந்தக் கதைதான் இந்தச்சிற்பத்தில் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தை மேல்பகுதி கீழ்ப்பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். மேல்பகுதி, சகர சக்கரவர்த்தி இந்திரனை நோக்கித் தவங்கிடந்து நவநிதிகளைப் பெற்றதைக் காட்டுகிறது.5 தேவர் தேவமகளிர் போலவும், குள்ள உருவமான பூத உருவங்கள் போலவும், நவநிதிகள் இப்பகுதியில் குறிப்பிட்டப் பட்டுள்ள. கீழ்ப்பகுதி, சாகர