உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக்கலை*

மாமல்லன் நரசிம்மவர்மன் அமைத்த குகைக்கோயில்களையும் பாறைக்கோயில்களையும் சில அடையாளங்களைக் கொண்டு நன்கு தெரிந்துகொள்ளலாம். அந்த அடையாளங்களைக் கீழே தருகிறேன்.

1. தூண்கள் : மாமல்லன் காலத்துக் குகைகளிலும், பாறைக் கோயில்களிலும் தூண்கள் உயரமாகவும், சற்று மெலிந்தும் இருக்கும். ன்னொரு முக்கியமான அடையாளம் என்னவென்றால், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துத் தூண்கள் சிங்கத்தூண்கள். அஃதாவது நிமிர்ந்து உட்கார்ந்த சிங்கங்கள் தூண்களைத் தாங்குவது போல இருக்கும். சிங்கத்தூண்களை முதன்முதல் உண்டாக்கினவன் மாமல்லன் நரசிம்மவர்மனே. இவனுக்குப் பிறகு வந்த பல்லவ அரசர்களும், சோழ அரசர்களுங்கூட, இவ்விதச் சிங்கத் தூண்களைத் தமது கோயில் கட்டிடங்களில் உபயோகித் திருக்கிறார்கள். ஆனால், நிமிர்ந்து உட்கார்ந்த சிங்கத்தூண்களை முதல் முதலாக அமைத்தவன் மாமல்லன் நரசிம்மவர்மனே. சிங்கத் தூண்களைத் தவிர சாதாரணத் தூண்களையும் மாமல்லன் உபயோகித்தான். இத் தூண்களைப் படத்தில் காண்க.

,

2. துவாரபாலகர் : கருவறை வாயிலுக்கு இருபுறத்திலும் துவார பாலகர் உருவம் அமைப்பது வழக்கம். மாமல்லனுடைய தந்தையான மகேந்திரவர்மன் காலத்துக் குகைக்கோயில்களில் துவார பாலகரின் உருவங்கள் உள்ளன. அவை முன்புறப் பார்வையாக (எதிர் நோக்கியவண்ணம்) அமைக்கப்பட்டிருக்கும். அன்றியும் துவார பாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கும்.

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துக் குகைக்கோயில்களிலும், பாறைக்கோயில்களிலும் துவார பாலகருக்கு இரண்டு கைகள்தான் உள்ளன. ஆனால், துவார பாலகர் எதிர் பார்வையாக இராமல், கருவறை வாயிலை நோக்கியபடி பக்கவாட்டமாகத் திரும்பி நிற்கிறார்கள். இவர்கள் உருவங்களைப் படத்தில் காண்க.

  • வாதாபிகொண்ட நரசிம்மன் (1957) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.