உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

3. சோமஸ்கந்தர் உருவம் : மகேந்திர வர்மனுடைய குகைக் கோயில் கருவறைச் சுவரில் சோமஸ்கந்த உருவம் இராமல் வெறுஞ் சுவராக இருக்கும் அவன் மகனான மாமல்லன் நரசிம்மவர்மன் அமைத்த குகைக் கோயில்களிலும், பாறைக் கோயில்களிலும் கருவறையின் பின்புறச் சுவரில் சோமஸ்கந்தர் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கும். கருவறைச் சுவரில் சோமஸ்கந்தர் திருவுருவத்தை முதன்முதலாக அமைத்தவன் மாமல்லனே. இவனுக்குப் பிறகு வந்த அரசர்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றிச் சோமஸ்கந்தர் உருவத்தைக் கருவறைச்சுவரில் அமைத்தார்கள்.

சோமஸ்கந்த மூர்த்தத்தின் அமைப்பு இது: கட்டில் போன்ற ஒர் ஆசனத்தில் சிவபெருமானும் பார்வதியம்மையாரும் சுகாசன மூர்த்தமாக அமர்ந்திருக்கிறார்கள். சிவபெருமான் நீண்ட சடாமூடியுடன் வலது காலை மடக்கி இடதுகாலைத் தொங்க விட்டுச் சுகாசனமாக அமர்ந்திருக்கிறார். அவருடைய நான்கு கைகளில் இரண்டு கைகளைத் தொடையின்மேல் வைத்திருக்கிறார். மற்ற இரண்டு கைகளில் மான்மழு ஏந்தியிருக்கிறார்.

சிவபெருமானுக்கு இடதுபுறத்தில் பார்வதியம்மையார் அதே ஆசனத்தில் சுகாசனமாக அமர்ந்திருக்கிறார். அவர் இடது காலைத் தொங்கவிட்டு வலதுகாலை மடக்கி அமர்ந்திருக்கிறார். இடதுகையை ஊன்றியிருக்கிறார். தலையில் கரண்டக மகுடம் தரித்துக் காதுகளில் குழைகளை அணிந்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் சிறு குழந்தை உருவமாகக் கந்தப்பெருமான் காட்சி யளிக்கிறார். இவர்களுக்குமேலே கொற்றக்குடை காணப்படுகிறது.

சோமஸ்கந்த மூர்த்தத்தின் பின்புறத்தில் வலதுபுறம் பிரமனின் உ ருவமும் இடதுபுறம் திருமால் திருவுருவமும் காணப்படுகின்றன. சில சோமஸ்கந்த மூர்த்தத்தின் காலடியில் ஏறு (எருது) படுத்திருப்பதுபோல் அமைக்கப்படுவதும் உண்டு, மாமல்லபுரத்து கயிலாசநாதர் குகைக் கோயிலில் (இதை இப்போது மகிஷாசுரக் குகைக்கோயில் என்கிறார்கள்) உள்ள சோமஸ்கந்த மூர்த்தத்தின் காலடியில் நந்தி (எருது) உருவம் காணப்படுகிறது.

குகைக்

இனி, மாமல்லன் நரசிம்மவர்மன் அமைத்த கோயில்களிலும் பாறைக் கோயில்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்ப உருவங்களை விளக்குவோம்.