உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி'

107

என்னும் சிலப்பதிகாரச் செய்யுளால் அறியலாம்.' கலிங்கத்துப்

பரணியும் இதனைக் கூறுகிறது:

66

அடிக்கழுத்தி னுடன்சிரத்தை அரிவ ராலோ

அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ

குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ.

என்னும் செய்யுள், 2வீரர்கள் கொற்றவைக்குத் தலைப்பலி கொடுக்கும் வழக்கத்தை நன்கு விளக்குகிறது. தக்கயாகப் பரணியிலும் இச் செய்தி கூறப்படுகிறது.

எனவே, கொற்றவையின் உருவச் சிற்பங்களில் காணப்படுகிற தலையை அறுக்கும் உருவம், வீரர்களின் உருவம் என்பதும் அவ் வீரர்கள் தமது அரசன் வெற்றி பெறுவதற்காகத் தமது தலையைத் தாங்களே அறுத்துக் கொற்றவைக்குப் பலி கொடுக்கிறார்கள் என்பதும் அறியத்தக்கன.

10. போர் மடந்தை : மாமல்லன் காலத்தில் அமைக்கப் பட்ட கொற்றவையின் மற்றொரு உருவச்சிற்பம் மகிஷாசுரமர்த்தனி குகைக்கோயிலில் இருக்கிறது. பாறைச்சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய சிற்பம், கொற்றவை, மகிஷா சுரனுடன் போர் செய்வது போல அமைந்திருக்கிறது.

இதில், வெற்றிமடந்தையாகிய கொற்றவை மகிஷாசுரனுடன் போர் செய்கிற போர்க்களக் காட்சி சிற்ப உருவமாக அமைக்கப் பட்டிருக்கிறது. கொற்றவை, தன் ஊர்தியாகிய சிங்கத்தின் முதுகில் அமர்ந்து வில்லை வளைத்து நாணை வலித்து அம்பு எய்கிறார். இக் கொற்ற வைக்கு எட்டுக் கைகள் உள்ளன. இடது கையில் வில்லைப் பிடித்து வலதுகையில் நாணைவலித்து அம்பு எய்கிறார். மற்ற ஆறு கைகளில் கேடயம், கட்டாரி, வாள், சங்கு, சக்கரம், பாசம், மணி முதலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். தலையில் மகுடமும், காதில் குண்டலங்களும் மின்னுகின்றன. முகத்தில் வீரமும் வெற்றியும் உறுதியும் மிளிர்கின்றன. ஊர்தியாகிய சிங்கம், மகிஷாசுரன் பக்கமாகப் பாய்கிறது. கொற்றவையின் பரிவாரங்களாகிய குறள் உருவம் உள்ள பூதகணங்கள் கத்தி கேடயம் முதலிய ஆயுதங்களைத் தாங்கி