உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

131

பல்லவ சாசனங்களில் சிம்மவிஷ்ணுவை நரசிம்ம விஷ்ணு என்றும், நரசிம்மனை சிம்மவிஷ்ணு என்றும் கூறப்படவில்லை.

இந்தச் சிற்பத்துக்கு எதிரில் நிற்பதுபோல அமைத்துள்ள சிற்பம், வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் தந்தை முதலாம் மகேந்திரவர்மன் உருவம் என்றும் கூறுகிறார்.1°

வேறுசில ஆராய்ச்சிக்காரர்கள், உட்கார்ந்திருக்கும் சிற்பம் சிம்மவிஷ்ணு (வாதாபிகொண்ட நரசிம்மவர்மனுடையபாட்டன்) என்றும், நிற்கும் உருவம் சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் என்றும் சான்று காட்டி எழுதினார்கள். கிருஷ்ண சாஸ்திரி சொல்லுவதுபோல, உட்கார்ந்திருக்கும் உருவம் நரசிம்ம வர்மனும் நிற்கும் உருவம் அவன் தகப்பனான மகேந்திரவர்மனு மானால் மகனை உட்காரவைத்தும் தகப்பனை நிற்கவைத்தும் சிற்ப உருவங்களை அமைக்கமாட்டார்கள்; அது இந்திய நாட்டு வழக்கம் அல்ல; ஆகவே, சாஸ்திரி கூறுவதுபோல் உட்கார்ந்த உருவம் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் உருவம் அல்ல, அவன் பாட்டனான சிம்மவிஷ்ணுவின் உருவம். நின்றுகொண்டிருப்பது சிம்ம விஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் உருவம் என்பதைச்சுட்டிக் காட்டினார்கள். இதற்குள் கிருஷ்ணசாஸ்திரி காலஞ்சென்று விட்டார்.

பிறகு, அரசாங்கத்துச் சாசன இலாகாவைச் சேர்ந்த ராவ்பகதூர் சி. ஆர். கிருஷ்ணமாசார்லு அவர்களும் வி. வெங்கடசுப்ப அய்யர் அவர்களும் சேர்ந்து வெளியிட்ட தென்னிந்திய சாசனங்கள் பன்னிரண்டாம் பகுதியில்11 இந்தச் சிற்பங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். இவர்கள், உட்கார்ந்திருக்கும் சிற்ப உருவம் நரசிம்மவிஷ்ணு (நரசிம்மவர்மன் I) என்றும், நிற்கும் உருவம் அவன்மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் (கிருஷ்ண சாஸ்திரி கூறுவதுபோல முதலாம் மகேந்திரவர்மன் அல்லன்) என்றும் எழுதியிருக்கிறார்கள். அஃதாவது, தகப்பனாகிய முதலாம் மகேந்திரவர்மனை நிற்பதுபோலவும், அவன் மகன் முதலாம் நரசிம்மவர்மனை உட்கார்ந்திருப்பது போலவும், சிற்பம் அமைத்திருக்கமாட்டார்கள் என்பதற்கு விடைகூறுவதுபோல இவர்கள், உட்கார்ந்திருப்பவன் வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் தான், னால், நின்றுகொண்டிருப்பவன். அவன் தகப்பனான நரசிம்ம வர்மன் அல்லன் அவன் மகனான இரண்டாம் நரசிம்மவர்மன் என்று எழுதியிருக்கிறார்கள்.12 அன்றியும் நிற்பது போன்ற சிற்பத்தின்