உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின் முகவுரை

நமது நாட்டிலே முற்காலத்திலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்று இருந்தது. ஜைன மதம் சிறப்புற்றிருந்த அந்தக் காலத்திலே, ஜைனர் கலைகளையும் காவியங்களையும் வளர்த்தார்கள். காவிய இலக்கியங்களை எழுதியதோடு அமையாமல் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் முதலிய கலைகளை வளம்பட வளர்த்தார்கள். பிற்காலத்திலே சமயப்பூசல்கள் கிளம்பி குழப்பங்கள் உண்டானபோது, ஜைன மதம், தான் இருந்த உயர் நிலையிலிருந்து பின்னடைந்து, காலஞ் செல்லச் செல்லக் குன்றிக் குறைந்துவிட்டது. ஜைனர்கள் வளர்த்த கலைகள் மறைக்கப்பட்டன. அல்லது மாற்றப் பட்டன. ஆனாலும் தமிழ் நாட்டிலே ஆங்காங்கே காணப்படுகிற சிற்பங்களும் ஓவியங்களும் குகைக் கோயில்களும் கற்கோயில்களும் பண்டைக் காலத்திலே ஜைனர் வளர்த்த கலைப்பண்புகளை இப்போதும் வெளிப்படுத்து கின்றன. ஆனால், அக்கலைப் பொருள்களின் காட்சியைக்கண்டு அக்கலையின்பங்களைத் துய்க்கிறவர் இக்காலத்தில் எத்தனைபேர் உளர்? அந்தோ! நமது நாடு - கலைகளை வளர்த்துக் கலையின் பத்தைத் துய்த்து வளர்த்த நமது நாடு, இப்போது கலைப்பெருமையை உணராமல் கலையின்பத்தை துய்க்காமல் காலங்கழிக்கிறது! இப்போது சிலகாலமாகக் கலை கலை என்னும் கூக்குரல் நாட்டிலும் ஏட்டிலும் கேட்கப்படுகிறது. எனினும் நமது பழங்கலையில், இன்னும் நமது மக்களுக்கு ஆர்வம் பிறக்கவில்லை.

ஜைனர் அமைத்துக் கொடுத்த பல கலைச் செல்வங்களிலே ஒன்று, மகாபலிபுரத்திலே கற்பாறையில் அழகுறச் செதுக்கி யமைக்கப்பட்டுள்ள புடைப்புச்சிற்பம் (Bas Relief Sculpture) இச்சிறந்த சிற்பம் இப்போது, அர்ச்சுனன் தபசு என்று பாமர மக்களாலும், பகீரதன் தபசு என்று வேறு சிலராலும் பெயர் கூறப்படுகிறது. ஆனால், இக்கதைகளுக்கும் இச்சிற்பத்திற்கும் யாதொரு பொருத்தமும் காணப்படவில்லை. ஜைனரின் அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை இச்சிற்பத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த