உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பின் முகவுரை

மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்னும் நூலின் மறுபதிப்பு இப்போது வெளிவருகிறது. அதில் சிற்சில மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. அர்ச்சுனன் தபசு என்று இந்தச் சிற்பத்தைத் தவறாகச் சிலர் கூறுகிறார்கள். உண்மை அதுவன்று. பகீரதன், கங்கையைக் கொண்டுவந்த புராணக்கதையை இச்சிற்பம் கூறுகிறது. பகீரதன் கதை சைவசமயத்தவருக்கும் ஜைன சமயத்தவருக்கும் பொதுவாக 'இந்து' சமயத்தவருக்கும் உரியது. ஆனால், மகாபலிபுரத்துச் சிற்பம் ஜைன சமயத்துக்கு உரியது என்பதை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்நூலை அச்சிடுகிற தமிழ்நாடு ஜைன சங்கத்துக்கு எனது நன்றி.

6

மயிலாப்பூர், சென்னை 4 4-4-1974

மயிலை சீனி. வேங்கடசாமி