உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

உள்ளே பழங்களையும் பூக்களையும் வைத்திருப்பது போல காட்டப்படுவது வழக்கம். இந்த மேல்நாட்டுச் சிற்பம் நமது நாட்டுச்சிற்பங்களில் அமைக்கப்படுவது இல்லை. ஆகவே இது Cornucopia அன்று. அதில் இருப்பது போன்று இந்தப்பொருளில் பூக்களும் பழங்களும் காணப்படவில்லை. ஆனால், இது எதைக் காட்டுகிறது என்றால், தண்ட ரத்தினத்தைக் காட்டுகிறது. தண்டரத்தினத்தினால் சாகரர் அகழி தோண்டி, அதனால்தான் கங்கையைக் கொண்டுவந்தார்கள் என்று கதை கூறுகிறது. அந்த தண்ட ரத்தினத்தைத்தான் ஒரு ஆள் கையில் வைத்திருப்பதுபோன்று இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அது கனமாக இருப்பதால் இந்த இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கிக் கொண்டிருக்கிறான். தண்ட இரத்தினத்தினாலே அகழி ஆழமாகத் தோண்டப்பட்டது என்பதையும், தண்ட ரத்தினத்தினாலே கங்கையாறு அகழிக்குக் கொண்டு வரப்பட்டது என்பதையும், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய கங்கையைப் பகீரதன் தண்ட இரத்தினத்தினால்தான் கடலில் கொண்டு போய் விட்டான் என்பதையும் காட்டுவதற்கு இங்குத் தண்ட இரத்தினம் சிற்பத்தில் காட்டப்பட்டிருப்பது பொருத்தம் அல்லவா?

கடைசியாக இந்தச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள கோயிலில் இருக்கிற உருவத்தைப்பற்றி விளக்கவேண்டுவது அவசியம் ஆகிறது. இந்தக்கோயில், கயிலாய மலையில் அமைக்கப்பட்டிருந்த ரிஷப தீர்த்தங்கரரின் கோயிலைக் குறிக்கிறது என்று கூறினேன். அப்படி யானால். இதில் காணப்படும் உருவம் ரிஷபதீர்த்தங்கரர் உருவமாக இருக்க வேண்டும். ஆனால், இதில் காணப்படுவது திருமால் (விஷ்ணு) உருவமாகக் காணப்படுகிறது. இதன் காரணம் என்ன? ஜைன தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரின் உருவம் இருக்க வேண்டிய இடத்தில் பெருமாள் உருவம் இருக்கக் காரணம் என்ன? இதற்குக் காரணம்: திருமால் (விஷ்ணு) ரிஷப தீர்த்தங்கரராக அவராதம் செய்து ஜைன மதத்தைப் பரவச் செய்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. அதாவது ரிஷப தீர்த்தங்கரரும் விஷ்ணுவும் ஒருவரே என்று கூறுகிறது. ஆகவே, சிற்பிகள் ரிஷபதீர்த்தங்கரருக்குப் பதிலாகத் திருமால் திரு உருவத்தை அமைத்தார்கள் போலும்.

(இதுகாறும் விளக்கிக் கூறப்பட்ட சிற்பங்கள் தவிர, ஏனைய சில சிற்ப உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அவை பூனை ஒன்று தபசு