உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

165

(குறிப்பு: இந்தக் கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர், Tri'sashti Salaka Purusha Charitra Vol. II. Translated by Helen M. Johnson. Gaekwad's Oriental Series) என்னும் இந்நூலில் கூறப்பட்ட கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் சிறிதும் வித்தியாசம் இல்லை. தமிழில் உள்ள ஸ்ரீ புராணம், ஜீவசம் போதனை என்னும் நூல்கள், சில மாறுதல்களோடு இக்கதையைக் கூறுகின்றன.)

தொடர்பு : 1

ஜீவ சம்போதனை என்னும் ஜைன சமய நூலிலே சகரச் சக்கரவர்த்தியின் கதை கூறுகிற பகுதியிலே, நவநிதிகளின் இயல்பு கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இருநாற் புகையுயர்ந் தீராறு நீண்டே

ஒருநான் கொன் பானகன்று ஓவாதே - பெருநீர்மை பின்றா நவநிதிகள் பெய்யும் பெருமுகில் போல்

வென்றாழி வேந்தற்கோர் வித்து.

இருக்குமிடத்தில் அற்ப நிலத்திலே அடங்கிப் போமிடத்து எட்டு யோசனை உயரமும் பன்னிரண்டு யோசனை நிகளமும் ஒன்பது யோசனை அகலமும் உடையவாய் ஒவாதே கொளினும் தவாத நவநிதிகளின் பெயர் யாவையோ எனின்,

வண்டோகை மானோகை பிங்கலிகையே பதுமை விண்டோயுஞ் சங்கையே வேசங்கை - தண்டாச் சீர்க்

காளையே மாகாளை சவ்வாதனம் பெயர்கள்

ஆகுமாம் என்றுரைப்பார் ஆய்ந்து.

வண்டோகை என்றும் மானோகை என்றும் பிங்கலிகை என்றும் பதுமை என்றும் சங்கை என்றும் வேசங்கை என்றும், காளை என்றும், மகாகாளை என்றும் சவ்வாதம் என்றும் நவநிதிகளின் பெயர் சொன்னவாறு. இவற்றின் செய்கை யாதோ எனின்;