உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

செங்கல்லினால் கட்டப்பட்டவை என்றும் தெரிகின்றன. ஆனால், இந்த மாடக் கோயில்கள் எத்தனை நிலைய (மாடிகளைக்) கொண்டிருந்தன என்பது தெரியவில்லை. மூன்று நிலை மாடக் கோயில்களாகத்ததான் இருந்திருக்க வேண்டும்.

மாமல்லபுரத்து மாடக் கோயில்கள்

கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த செங்கற் கட்டிடங்களாலான மாடக் கோயில்களின் மாதிரியைப் பல்லவ அரசனான நரசிம்ம வர்மன் (மாமல்லன்) மாமல்லபுரமாகிய மகாபலிபுரத்திலே கருங்கல்லினால் அமைத்திருக்கிறான். அவை இரண்டு நிலை, மூன்று நிலையுள்ள மாடக் கோயில்களின் மாதிரி ஆகும்.

7

அர்ச்சுனன் இரதம் என்று இப்போது தவறாகப் பெயர் வழங்கப்படுகிற கோயில், (இரண்டு நிலை (இரண்டடுக்கு) மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். தருமராஜ இரதம் என்று தவறாகப் பெயர் வழங்குகிற இன்னொரு மாடக்கோயில், மூன்று நிலையுள்ள மாடக் கோயிலின் அமைப்பு ஆகும். சகாதேவ இரதம் என்பதும் மூன்று நிலையுடைய மாடக்கோயிலின் அமைப்பு ஆகும். இந்த மாடக்கோயிலின் அமைப்பைக் கருங்கற் பாறையில் அமைத்த காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் ஆம். இவை பழைய செங்கற் கட்டிடங்களாலாய மாடக் கோயில்களின் மாதிரி உருவ அமைப்பாகும்.

வேறு மாடக் கோயில்கள்

6

கற்றளியாக அமைக்கப்பட்டு இப்போதும் வழி பாட்டில் உள்ள மாடக் கோயில்கள் இரண்டு உள்ளன. அவை காஞ்சீபுரத்தில் உள்ள பரமேச்சுர விண்ணகரமும், உத்திரமேரூர் சுந்தர வரதப் பெருமாள் லயமும் ஆகும். காஞ்சீபுரத்துப் பரமேச்சுர விண்ணகரத்தை இப்போது வைகுண்டப் பெருமாள் கோயில் என்று கூறுவார்கள். இக் கோயிலைப் பரமேசுவர வர்மன் என்னும் பல்லவ அரசன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டினான். இதனைத் திருமங்கை யாழ்வார் பாடியிருக்கிறார். இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். னால் இரண்டாவது மாடிக்கு மட்டும் படிகள் உள்ளன; மூன்றாவது