உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

183

திருநாவுக்கரசு கூறுகிற இளங் கோயில் பாலாலயம் அல்ல. கோயில் கட்டிட வகைகளில் ஒன்றைத்தான் இளங் கோயில் என்று கூறுகிறார். சிலர், இளங்கோயில் என்பது முருகன் கோயிலுக்குப் பெயர் என்று கூறுவர். இதுவும் சரியன்று.

இளங் கோயில் பற்றித் தேவாரத்திலும் சாசனங்களிலும் கூறப்படுகிறது. சோழ நாட்டு மீயச்சூர் கோயில் இளங்கோயில் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். மீயச்சூர் என்பது இப்போது பேரளம் என்று வழங்கப்படுகிறது. “கடம்பூர் இளங்கோயிலும் கயிலாய நாதனையே காணலாமே'* என்று கூறுகிறார். ஆகவே, கடம்பூர் கோயிலும் இளங்கோயில் எனத் தெரிகிறது. (கடம்பூர்க் கோயிலில் கரக்கோயிலும் உண்டு. கடம்பூர் கரக் கோயிலைத் திருநாவுக்கரசரே வேறு இடத்தில் கூறுகிறார். கடம்பூர் கோயிலிலே கரக்கோயில், இளங் கோயில் என்னும் இரண்டு வகையான கட்டிடங்களும் உள்ளன.)

10

பூதத்தாழ்வார் தமது இரண்டாத்திருவந்தாதியில் வெள்ளத்திளங் கோயிலைக் கூறுகிறார். இராஜராஜன் I காலத்துச் சாசனம் ஒன்று கடம்பூர் இளங் கோயிலைக் குறிப்பிடுகிறது." திருச்சி மாவட்டம் குளித்தலை தாலுகா இரத்தினகிரி என்னும் ஊரில் உள்ள சாசனம், பாண்டியன் ஜடாவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டிய தேவர் | (கி.பி. 1254 - 1264) காலத்தில் எழுதப்பட்டது. இதில், திருவாலீசுரமுடைய நாயனார், திருக்கயிலாய முடைய நாயனார் என்னும் இரண்டு கோயில்களும் இளங்கோயில்கள் என்று கூறப்படுகின்றன.12

-

சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுகா திருச்சோகினூரில் இருந்த ஒரு கோயில் இளங்கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக் கோயிலில் இருந்த கடவுளுக்குத் திரு இளங்கோயில் பெருமானடிகள் என்று பெயர் இருந்தது. 13இக்கோயில் சில காலத்துக்கு முன்னர் இடிக்கப்பட்டது.

நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம் எளங்கோயில் ஒன்றைக் கூறுகிறது. இளங் கோயிலைத்தான் இந்த வடமொழிச் சாசனம் எளங் கோயில் என்று கூறுகிறது4. சிலர் கருதுவது போல் இளங் கோயில் பாலாலயமாக இருந்தால் இந்த வட மொழிச் சாசனம் வட மொழிச் சொல்லாகிய பாலாலயம் என்பதையே கூறியிருக்கும். ஆனால், இளங்கோயில் என்று கூறுகிறபடியால்,