உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

எந்தெந்தக் கோயிலின் பெயர்கள் என்பது தெரியவில்லை. இதைக் கண்டறிய வேண்டியது நமது நாட்டுச் சிற்பக் கலைஞர்களின் கடமையாகும். ஆயினும், எம்மால் இயன்ற அளவு இதனை ஆராய்வோம்.

ஆலக்கோயில்

முதலில், ஆலக்கோயில் என்று திருநாவுக்கரசர் கூறிய கோயிலை ஆராய்வோம். ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில் என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால் கட்டப்பட்ட கோயில் என்று கருதுகிறார்கள். இது தவறு, ஆலமரம், கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற உறுதியான மரம் அல்ல. அதனால் கட்டிடம் கட்டும் வழக்கம் இல்லை. வேறு சிலர், ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் என்று கருதுகிறார்கள். இதுவும் தவறு. ஆலக் கோயில் என்பது கோயில் கட்டிட வகைகளில் ஒன்றென்பது தெளிவானது. ஆலக் கோயில் கட்டிடம், மேலே கூறியது போல ஆனைக்கோயில் வடிவமாக இருக்கும். சிற்ப சாத்திரங்களில் இக்கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும் ஹஸ்தி பிருஷ்டவிமானக் கோவில் என்றும் கூறப்படுகிறது. கஜம், ஹஸ்தி என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள். யானையின் முதுகுபோன்று இந்தக் கோயிலின் கூரை அமைந்திருப்பதனால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தமிழிலே இது யானைக் கோயில் என்று வழங்கப்பட்டுப் பிறகு ஆலக் கோயில் என்று மருவிற்று.'

9

திருவெற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றத்து பக்தவத்சலஈசுவரர் கோயில் முதலியவை ஆலக் கோயில் எனப்படும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும்.

இளங்கோயில்

இளங் கோயில் சிலர் இதனைப் பாலாலயம் என்று கூறுவர். பழைய கோயிலைப் புதுப்பிக்கிறபோது, கோயில் திருப்பணி முடிகிறவரையில், அக்கோயில் மூல விக்கிரகத்தைத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கட்டிடத்தில் வைத்திருப்பார்கள். இந்தத் தற்காலிகமான ஆலயத்திற்குப் பாலாயம் என்பது பெயர். ஆனால்,