உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

181

கோயில்களுக்கு மிஸ்ர கட்டிடம் என்றும், இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களால் கட்டப்பட்ட கோயில்களுக்குச் சங்கீர்ணம் என்றும் பெயர்கள் கூறப்படுகின்றன.

கோயிலின் வகைகள்

திராவிடக் கோயில் கட்டிடங்களின் (தலையின்) கூரையின் அமைப்பைக்கொண்டு அவைகளுக்கு வெவ்வேறு பெயர்களைச் கூறுகிறார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் தமது திரு அடைவு திருத்தாண்டகத்தின் 5-ஆம் செய்யுளில், கோயில் கட்டிட வகைகளின் பெயர்களைக் கூறுகிறார். அச்செய்யுள் இது.

“பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற் கோயில்

கருப்பறில் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து

தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே'

இப்பாடலிலே, சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டு கோயில்களைக் கூறிய பின்னர், கரக் கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்று ஆறு வகையான கோயில்களைக் கூறுகிறார்.

சிற்ப நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிலாசம், ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்னும் ஏழுவித மான கோயில்களைக் கூறுகின்றன. காமிகாகமமும் இப்பெயர்களைக் கூறுகிறது.

திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகிறதையே சிற்ப நூல்கள் வடமொழிப் பெயரினால் கூறுகின்றன. பெயர் வேற்றுமையே தவிர பொருள் வேற்றுமை யில்லை. எந்தெந்தக் கோயில்களுக்கு எந்தெந்தப்பெயர் என்பதற்குச் சிற்ப நூல்களில் விளக்கம் கூறப்படுகின்றன. ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற பெயர்களுக்கு விளக்கம் இப்போது தெரியாதபடியினாலே, அவை