உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

5. தலை அல்லது கூரை. இதற்குப் பண்டிகை, சிகரம், மஸ்தகம், சிரம் முதலிய பெயர்கள் உள்ளன.

6. முடி அல்லது கலசம். இதற்கு ஸ்தூபி, சிகை, சூளம் முதலிய பெயர்கள் உண்டு.

கோயில் கட்டிடத்தில் அமைய வேண்டிய இந்த ஆறு உறுப்புகளுக்கும் சில அளவுகள் உள்ளன. அந்த அளவுகளை யெல்லாம் தீர ஆராய வேண்டியதில்லை. ஆனால், பொதுவான அளவைமட்டும் தெரிந்துகொள்வோம். அந்த அளவுகளாவன:

1. அடி அல்லது அதிஷ்டானத்தின் உயரம் 1 பங்கு.

2. உடல் அல்லது பாதத்தின் உயரம் 2 பங்கு

3. தோள் அல்லது மஞ்சத்தின் உயரம் 1 பங்கு 4. கழுத்து அல்லது கண்டத்தின் உயரம் 1 பங்கு 5. தலை அல்லது பண்டிகையின் உயரம் 2 பங்கு. 6. முடி அல்லது ஸ்தூபியின் உயரம் 1 பங்கு.

இந்த அளவு ஒரு நிலையையுடைய சாதாரணக் கோயில் களுக்காகும். இதுவன்றி வேறு சில அளவுகளும் ஒரு நிலைக் கோயிலுக்கு உண்டு.

இரண்டு நிலைக்கோயிலின் அமைப்பு 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. கழுத்து, 7, கூரை, 8. கலசம் என அமையும்.

மூன்று நிலை மாடக் கோயிலின் அமைப்பு: 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை, 8, கழுத்து, 9. கூரை, 10, கலசம் என இவ்வாறு அமையும். கோயில் கட்டிடத்தின் பல்வேறு அமைப்புக்களைச் சிற்ப நூலில் கண்டு கொள்க.

கோயில் கட்டிடங்கள் கட்டப்படும் பொருள்களைக் கொண்டு அவை மூன்று பெயர்களைப் பெறுகின்றன. அவை சுத்தம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பன. முழுவதும் மரத்தினாலோ செங்கல்லினாலோ அல்லது கருங்கல்லினாலோ கட்டப்பட்ட கோயில்களுக்குச் சுத்த கட்டிடம் என்றும், இரண்டு பொருள்களைக் கலந்து அமைக்கப்பட்ட