உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

பட்டத்தையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடையது ஸ்கந்த காந்தம் என்று வேறு பாடபேதத்தையும் காமி காகமம் கூறுகிறது.7

நமது நாட்டில் ஆறுபட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு, அல்லது எட்டுப்பட்டையான சிகரமுள்ள கோயிலாக இருக்கக்கூடும்.

திருநாவுக்கரசர் கூறிய கரக்கோயில்; ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்னும் கோயில் வகைகளையும், சிற்ப நூல்களில் வடமொழிப் பெயராகக் கூறப்படுகிற விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம் என்னும் கோயில் வகைகளையும் ஒருவாறு பொருத்திக் கூறினோம். இவற்றில் ஆலக் கோயிலும் ஹஸ்தி பிருஷ்டமும் ஒன்றே என்பதிலும், ஐயப்பாடு ஒன்றும் இல்லை. ஆனால் ஏனைய பொருத்தங்கள் என்னுடைய ஊகமேயொழிய முடிந்த முடிபு அல்ல. இவற்றைப் பற்றி சிற்ப சாஸ்திரிகள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும்.

உயரமான கோயில்கள்

மிக உயரமான விமானத்தை யுடையது தஞ்சாவூர் பெரிய கோயில். இராஜராஜ சோழன் I இதைக் கி. பி. 1000-இல் கட்டினான். இது 190 அடி உயரம் உள்ளது. இதைப் போன்ற அமைப்பும் உ உயரமும் உடையது, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில். இது கி.பி. 1025-இல் கட்டப்பட்டது. மற்றொரு உயரமான கோயில் திரிபுவனத்துக் கம்பகரேஸ்வரர் கோயில். இவை சோழர்களால் கட்டப்பட்டன. இவையே மிக உயரமான கோயில்கள், பிற்காலத்துக் கோயில்கள் இவ்வளவு உயரமாகக் கட்டப்படவில்லை.

காலப் பகுப்பு

திராவிடக் கட்டிடக் கலையைப் பழைய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகர அரசர் காலம் என்று ஐந்து காலப் பகுதியாகப் பிரித்துக் கூறுவர்.