உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில்கள்*

மகேந்திரவர்கமன் காலத்துக் கோயில் கட்டிடங்'களைப் பற்றி

ஆராய்வோம்.

மகேந்திரவர்மன் காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டிலே கோயில் களே கிடையாது என்றும், அவனுக்குப் பிறகு தான் கோயில்கள் ஏற்பட்டன என்றும் ஐரோப்பியரில் சிலர் தவறாகக் கருதியிருந்தார்கள். அவ்வாறு கருதியவர்களில், பல்லவ சரித்திர ஆராய்ச்சியில் வல்லவரான பிரான்ஸ் தேசத்து ஜோவி டூப்ரேல் என்பாரும் ஒருவராவர். ஆனால், ஜோவி டூப்ரேல் அவர்கள், காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோவில் பௌர்ணமி மண்டபத் தூண்களைக் கண்டபிறகு, மகேந்திரவர்மன் காலத்திலும் அவனுக்கு முற்பட்ட காலத்திலும் கோயில் கட்டிடங்கள் தமிழ்நாட்டிலே இருந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அதுபற்றி ஒரு சிறு நூலையும் எழுதினார்.

2

1. மண்டளியும் கற்றளியும்

மகேந்திரவர்மன் காலத்திலும் அவனுக்கு முற்பட்ட காலத்திலும் கணக்கற்ற கோயில்கள் (கோயில் கட்டிடங்கள்) தமிழ்நாட்டிலே இருந்தன. ஆனால் அவை கற்றளிகள் அல்ல. அஃதாவது கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப் பட்ட கோயில்கள் அல்ல. அவை செங்கல் சுண்ணாம்பு மரம் முதலிய பொருள்களினால் கட்டப்பட்ட கோயில்கள் ஆகும். மகேந்திர வர்மனுக்கு முன்பு இருந்த அரசர்கள் செங்கல் சுண்ணாம்பு மரம் முதலியவைகளைக் கொண்டுதான் கோயில்களைக் கட்டினார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல்லவனீச்சரம் என்னும் கோயில்,

  • மகேந்திரவர்மன் (1955) எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை.