உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

களைப் பற்றி நாம் எழுதிவருகிற மாமல்லன்-நரசிம்மவர்மன் என்னும் நூலில் விளக்கமாக ஆராய்வோம். நிற்க.

மகேந்திரவர்மன் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் அமைந்திருந்த பழைய செங்கற் கட்டிடக் கோயில்கள், காலப் பழைமையினாலே பழுதடைந்தபோது பிற்காலத்தவர் அக் கட்டிடங்களைக் கற்றளியாகக் கருங்கல்லினால் புதுப்பித்துக் கட்டினார்கள். இச் செய்தியைச் சாசனங்களினால் அறிகிறோம். ஆனால், கருங்கல்லினால் கற்றளி அமைக்கும் முறை மகேந்திர வர்மன் காலத்தில் ஏற்படவில்லை. மகோந்திர வர்மனுடைய பேரனான இராசசிம்மன் காலத்தில் கி. பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கற்றளிகள் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

மகேந்திரவர்மன் காலத்தில் செங்கல்லால் அமைக்கப்பட்ட கோயில்கள் இப்போது இல்லை.

சோழநாட்டில் இவனால் கட்டப்பட்டதென்று கருதப்படு கின்ற மயேந்திரப்பள்ளிக் கோயில் (இது இப்போது கோயிலடிப் பாளையம் என்று வழங்கப்படுகின்றது.) சில தடவையாவது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் செங்கற்கோயில் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக நிலைபெற்றிருக்காது அல்லவா? ஆகவே, மகேந்திர வர்மன் அமைத்த செங்கற் கட்டிடக் கோயில் களில், இப்போது ஒன்றேனும் இல்லை என்றே கூறவேண்டும்.

ஆனால், மகேந்திரவர்மன் தன் காலத்தில் புதிதாக அமைத்த குகைக்கோயில்கள் இப்போதும் உள்ளன. அக்குகைக் கோயில்களை ஆராய்வோம்.

அடிக்குறிப்புகள்

1. Architecture.

2. Conjeevaram Inscriptions of Mahendravarman I. by G. Jouveou Dubreuil of Pondicherry College 1919.

3. அப்பர், திருஅடைவு திருத்தாண்டகம்-5.