உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

பெருங்கோயில் எழுபதினோ டெட்டும், மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்,

கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில், இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்

இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து

தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.

199

என்பது அவர் பாடல். இப்பாடலில் கூறப்படுகிற பெருங் கோயில், சுரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்பன கோயில் விமான வகையில் வெவ்வேறு விதங்கள் என்று தெரிகின்றன.

திருக்குடவாயில், கீழ்வேளுர், திருப்பூந்தராய், திருஅம்பர், சிவபுரம், தலைச்சங்கை முதலிய ஊர்களில் இருந்த கோயில்கள் பெருங்கோயில்கள் என்று தேவாரத்தினால் அறிகிறோம்.

திருக்கடம்பூரில் இருந்த கோயில் சுரக்கோயில் என்பது தெரிகிறது. சுரக்கோயிலைச் சிலர் கற்கோயிலென்று கூறுகிறார்கள். கற்கோயில்கள் அஃதாவது கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளிகள் மகேந்திரவர்ம பல்லவன் இருந்த கி. பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றியவை. ஆகவே, மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் கூறுகிற சுரக்கோயில் கற்கோயில் அன்று; இது கோயில் விமான அமைப்பில் ஒருவகையானது என்று கருதுவதே சரியானது.

திருமீயச்சூரில் இருந்தது இளங்கோயில். திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூர் (திருச்சோகினூர்) என்னும் ஊரில் இருந்து இப்போது அழிந்துபோன ஒரு கோயிலும் இளங்கோயில் என்று ஒரு கல்லெழுத்துச் சாசனம் கூறுகிறது.

கடம்பை, திருக்கருப்பறியலூர் முதலிய ஊர்க்கோயில்கள் கொகுடிக் கோயில்கள். கொகுடிக் கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில் என்பவைகளைப் பற்றிச் சிலர் பொருத்தமற்ற சில கருத்துக்களைக் கூறுகிறார்கள். அக் கருத்துக்களை எல்லாம் இங்கு ஆராய்வது நம் கருத்தன்று. நாவுக்கரசர் கூறுகிற இந்தக் கோயில்