உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

241

வரக்கிருகம், அஃதாவது சிவனுக்காகமட்டும் ஏற்பட்ட தனிக்கோயில் அன்று. அன்றியும், இக் குகைக்கோயிலின் அமைப்பு தூண்களின் அமைப்பும் பிற்காலத்துப் பல்லவர் குகைக்கோயில் அமைப்புப்போல் இல்லாமல் மகேந்திரவர்மன் காலத்துக் குகைக்கோயில் அமைப் பையே ஒத்திருக்கின்றன. ஆகவே, இக் குகைக்கோயில் மகேந்திரன் காலத்தில் அமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. இங்குக் காணப்படுகிற வடமொழிச் சாசன சுலோகம் பிற்காலத்தில் எழுதப் பட்டது. (இந்தச் சாசனம், கணேச ரதத்தில் எழுதப்பட்டுள்ள அதே சாசன சுலோகத்தின் பிரதியாகும்.) இந்தக் குகைக் கோயிலில் பிற்காலத்தில் எழுதப்பட்ட இச் சாசனத்தின் கருத்து இது:-

26

1. ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முச்செயல்களுக்கும் காரணமாயும் ஆதிநாயகராயும் இருக்கிற காமாந்தகமூர்த்தி மானிடரின் அத்யந்தகாமங்களை (விருப்பங்களை) நிறைவேற்றி யருள்வாராக.

2. மாயைகளோடு கலந்திருக்கும் மாயையில்லாதவராயும் பல குணங்களைக் கொண்டிருந்தும் குணங்கள் இல்லாதராயும் தமக்குத் தாமே காரணராயிருப்பவரும் எல்லாருக்கும் தலைவராக இருப்ப வரும் தமக்கோர் இறைவன் இன்றித் தாமே இறைவனாக இருப்ப வரும் ஆகிய அவருடைய வெற்றி வாழ்வதாக.

3, கயிலாய மலையையும் அதைத் தூக்கிய தசமுகனையும் (இராவணனையும்) பாதலத்தில் அழுந்தும்படி கால்விரலால் அழுத்திய, அத்தகைய ஆற்றலையுடைய பிறப்பிலியாகிய சிவபெருமானை ஸ்ரீநிதி தமது தலையில் தாங்கியிருக்கிறார்.

4. நிலமகளைக் காதலோடு கைகளில் அணைத்துக் கொண்டு, பக்தி நிறைந்த உள்ளத்திலே பவனை (சிவனை) வைத்துக்கொண்டு இருக்கிற ஸ்ரீபரன் வெற்றியுடன் நெடுங்காலம் வாழ்வானாக.

5. பகை மன்னரின் நாடுகளைத் தன் அடிப்படுத்தி கணஜயன் என்னும் பெயர்படைத்த அத்யந்தகாம அரசன், அம்புவுக்கு (சிவனுக்கு) இந்த இல்லத்தை அமைத்தான்.

6. காற்றும் தீயுமாகவும் பீமனும் சிவனுமாகவும் சங்கரனும் காமாந்தகனுமாகவும் உள்ள அவன் வெற்றயுடன் விளங்குவானாக.

7. மகாராஜனுக்கும் (குபேரனுக்கும்) மகாராஜனும், ஆனால், குரூபியாயில்லாதவனும், மக்களைத் துன்புறுத்தாமல் அருளுடன்