உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

குகைக்கோயில்கள்

245

திரிமூர்த்தி குக்ைகோயில் : மகாபலிபுரத்தில் உள்ள இது, ஒரே கற்பாறையில் மேற்குப்பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் இக் குகைக்கோயில் அமைக்கப்பட்டது. ஆகவே, மும்மூர்த்தி கோயில் என்றும் திரிமூர்த்தி கோயில் என்றும் கூறப்படுகிறது. வடக்குப்புறத்தில் பிரமனுக்கும் தெற்குப்புறத்தில் திருமாலுக்கும் நடுவில் சிபெருமானுக்கும் இதில் கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக் குகைச் கோயிலின் கருவறைகள், தரைமட்டத்திற்கு மேலே மூன்றடி உயரத்தில் அமைக்கப்பட்டிருப்பதனால், உள்ளே செல்ல படிகள் அமைத்துள்ளன. பிரமாவின் கருவறை வாயிற் படியின்மேலே, பல்லவக்கிரந்த எழுத்தினாலே மல்ல என்னும் சொற்கள் எழுதப்பட்டிருக்கிறபடியினால் இக்குகைக்கோயிலை அமைத்தவன் மாமல்லனான நரசிம்மவர்மன் என்பது தெரிகிறது.

1

திரிமூர்த்தி குகைக்கோயில் : தரையமைப்புப் படம்

ஏனைய குகைக்கோயில்களுக்கு உள்ளதுபோல் இதற்கு முகமண்டபம் இல்லை. கோயிலின் மேற்புறத்தின் முகப்பில், பல்லவர்கால முறைப்படி, கர்ணகூடு பஞ்சரம் சாலை முதலியவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்ப உருவங்களைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம். இக்குகைக்கோயிலைச் சேர்ந்தாற் போல, இதன் தெற்குப்புறத்தில், கற்பாறையிலே கொற்றவையின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றியும் பின்னர்க் கூறுவோம்.