உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

259

அமைக்கப்

பெரிய கோயில் ஒரே பாறையைக் குடைந்து பட்டிருக்கிறது. இது, சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயில் அமைப்பைக் கொண்டது. நீண்ட சதுரமான மண்டபத்தையும், அதன் மேல் படகைக் கவிழ்த்து வைத்ததுபோன்ற கூரையையும் (விமானத் தையும்,) நான்கு புறத்திலும் தாழ்வாரத்தையும் உடையது. இதன் தூண்கள் நரசிம்மவர்மன் காலத்துச் சிங்கத் தூண்கள்.

இந்தக் கட்டிடத்தின் விமானமும், கர்ணகூடு கோஷ்ட பஞ்சரங்களும் ஆகிய மேல்பகுதி மட்டும் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன. கட்டிடத்தின் கீழ்ப்பகுதிகள் முற்றுப்பெறாமல் அரை குறையாகவே விடப்பட்டிருக்கின்றன. இது முற்றுப் பெறுவதற்குள் பாறை வெடித்துவிட்டபடியால் இப்பகுதிகள் முற்றுப்பெற அமைக்கப் படவில்லை.

து வேசரம் என்னும் சிற்பப்பகுதியைச் சேர்ந்த கட்டிடம். இவ்விதக் கட்டிடத்தை ஆதியில் பௌத்தர்கள் அமைத்தார்கள். பிறகு, இத்தகைய கட்டிடங்கள், தமிழ் நாட்டிலும் இடம்பெற்றன. பௌத்தர் களின் விகாரைகள் (பௌத்தமடங்கள்) இந்த அமைப்பில் அமைக்கப்

L

எ.

பிமரம் என்லும் பாதைக்கோயிலின் முகசாலையில் உள்ள சேதிய பற்ப