உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

இரத தம்

கோயிலில் தரையமைப்புப் படம்

ன்னும் கோயிலில்

இந்த நிலைக்கு மேலே, கர்ண கூடுகளும் சாலைகளும், பஞ்சரங்களும் பல்லவர்காலச் சிற்ப முறைப்படி அமைந்துள்ளது. அதற்கு மேலே, சற்று உள்ளடங்கி இரண்டாவது நிலை இருக்கிறது. இந்த நிலைக்குச் செல்ல படிகள் இல்லை. இரண்டாவது நிலையில் கருவறையும் இல்லை. ஆயினும் கருவறை வாயில் போல நாற் புறத்திலும் வாயில்கள் சிற்ப உருவமாகக் காட்டப்பட்டுள்ளன. இரண் டாவது நிலைக்கு மேலே, கர்ணகூடு சாலை பஞ்சரங்களும், அதற்கு மேலே கழுத்தும், அதன் மேலே எட்டுப்பட்டையுள்ள விமானமும் சிற்ப அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் மேலே இருந்த கல்லால் அமைத்த கும்பகலசம் கீழே விழுந்து தரையில் கிடக்கிறது.

இந்த அழகான கோயிலின் மேலிருக்கும் விமானத்தைப், பிற்காலத்தில் நிகழ்ந்த சமயப் போரில், யாரோ உடைத்துப் பின்னப்படுத்தி விட்டார்கள். இப்போது, அந்த உடைப்பைப் பழுது பார்த்து முழு உருவமாக அமைத்திருக்கிறது ஆர்க்கியாலாஜி இலாகா. எழிலோடு கச்சிதமாக அமைந்துள்ள இந்த இரண்டு நிலைமாடக் கோயில், இப்போதும் வெகு அழகாகக் காணப்படுகிறது. அடிமுதல் முடிவரையில் ஒரே பாறைக்கல்லைச் செதுக்கி யமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலும், இதிலுள்ள சிற்ப உருவங்களும், மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்துச் சிற்பிகளின் கைவல்லமையைக் காட்டு கின்றன.

“பீமன் இரதம்”

“அர்ச்சுனன் இரதம்” என வழங்கப்படும் இரண்டு நிலை மாடக்கோயிலுக்குத் தெற்கில் “பீமரதம்” எனப்படும் நீண்ட சதுரமுள்ள