உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

மானிடரின் அத்தியந்த காமங்களை (விருப்பங்களை) நிறைவேற்றி யருள்வாராக.

2. மாயையோடு கலந்திருக்கும் மாயையில்லாமலும், பல குணங்களைக் கொண்டிருந்தும் குணமில்லாமலும், தமக்குத்தாமே காரணராகவும், எல்லோருக்கும் தலைவராகவும் தமக்கோர் இறைவன் இன்றித் தாமே இறைவனாகவும் இருக்கிற அவருடைய வெற்றி வாழ்வதாக.

3. கயிலாய மலையையும் அதனைத் தூக்கிய தசமுகனையும் (இராவணனையும்) பாதலத்தில் அழுந்தும்படி கால்விரலால் அழுத்திய, அத்தகைய ஆற்றலையுடைய பிறப்பிலியாகிய சிவபெருமானை ஸ்ரீநிதி தமது தலையில் தாங்கியிருக்கிறார்.

4. நிலமகளைக் காதலோடு கைகளில் அணைத்துக் கொண்டு, பக்தி நிறைந்த உள்ளத்தில் பவனை (சிவனை) வைத்துக்கொண்டு இருக்கிற ஸ்ரீபரன், வெற்றியுடன் நெடுங்காலம் வாழ்வானாக.

5. பகை மன்னரின் நாடுகளைத் தனக்கு அடிப்படுத்தி ரணஜயன் என்று பெயர்படைத்த அத்யந்தகாம அரசன், சம்புவுக்கு (சிவனுக்கு) இந்த இல்லத்தை அமைத்தான்.

6. காற்றுந்தீயுமாயும் பீமனும் சிவனுமாயும் சங்கரனும் காமாந்தகனாயும் உள்ள அவன் வெற்றியுடன் விளங்குவானாக.

7. மகாராஜனுக்கு (குபேரனுக்கு) மகாராஜனும், ஆனால் குரூபியா யில்லாதவனும், மக்களைத் துன்புறுத்தாமல் அருளுடன் காக்கும் சக்கரவர்த்தியும், சந்திரனைப் போன்றவனும், ஆனால் நலிந்த உடம்பு இல்லாமல் நல்லுடம்பு பெற்றவனும் ஆகிய தருணாங்குரன் வெற்றி பெறுவானாக.

8,9. பகை மன்னரின் ஆற்றலை அழித்தவனும் திருமகள் தங்குவதற்கு இடமாகவுள்ளவனும் காமனைப்போன்று அழகுள்ளவனும் அரனை (சிவனை) எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பவனுமாகிய அத்யந்தகாமனுடைய, தாமரை மலர்கள் மலரப்பெற்று நீராடுதற்கு ஏற்ற நறுநீர்ப் பொய்கை போன்று பட்டாபிஷேக நீரினாலும் இரத்தின மணிமுடியினாலும் விளங்குகின்ற திருமுடியில், சங்கரன் எழுந்தருளியிருக்கிறான்.