உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

இக்கோயில்கள் பழைய காலம் முதல் உள்ளன. இக்கட்டிடப் பெயர்களையும் வேறு சில கட்டிடப் பெயர்களையும் இவருக்கு முன்பிருந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறியிருக்கிறார்.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயி லெழுபதினோ டெட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்

கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து

தாழ்ந் திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே.

என்று அவர் பாடியிருப்பது காண்க. இவை கோயில் கட்டிட வகைகள் ஆகும். இவற்றின் விரிவை இந்நூலாசிரியர் எழுதியுள்ள, “தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்” என்னும் நூலில் காண்க.

சாலாகார விமானம்

சிதம்பரத்துச் சிற்றம்பலத்தை அப்பரும சம்பந்தரும், பாடியது போலவே, மூன்றாம் நந்திவர்மன், முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவரான மாணிக்கவாசகரும் சுந்தரரும் பாடியிருக்கிறார்கள். இங்கு இக்கோயில் கட்டிட அமைப்பைப்பற்றிக் கூறவேண்டும். அது வென்னவென்றால் : 1.சிதம்பரம் கோயில், ஆதிகாலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்தது. 2. அக்கோயில், பௌத்த விகாரையின் அமைப்பைப் போன்றது என்பதே. இதனை விளக்குவோம்.

இக்கோயில் ஆதிகாலத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்ததை இப்போதுள்ள அமைப்பினாலும் அறியலாம். இப்போதுள்ள சிற்சபையும் கனக சபையும் மரக்கட்டிடங்களே. இவற்றின் கூரை (விமானம்) பொற்றகடு வேயப்பட்டிருக்கிறது. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி எழுந்தருளியுள்ள நிருத்த சபை, முற்காலத்தில் மரக்கட்டிடமாக இருந்தது. அது, பிற்காலத்தில் கருங்கல் கட்டிடமாகக் (கற்றளியாகக்) கட்டப்பட்டிருக்கிறது. ஆயினும், இக்கருங்கல் கட்டிடம், பழைய மரக்கட்டிட அமைப்பைப் போலவே அமைக்கப்பட்டிருப்பது காணத்தக்கது. மண்டபத்தின் தூண்களும் கூரையும் மரக்கட்டிட