உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கலை*

கோவில் வகைகள்

தெள்ளா றெறிந்த நந்திவர்மன் காலத்துக் கோயில் கட்டடங் களைப் பற்றிக் கூறுவோம்.

கோயில் கட்டட வகைகளில், கரக்கோயில், கொகுடிக் கோயில், ஆலக்கோயில், பெருங்கோயில் என்பவைகளை இவ்வரசன் காலத்தவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுகிறார்.

66

“கல்லால் நிழற்கீழ் ஒருநாள் கண்டதும் கடம்பூர்கரக் கோயில் முன்கண்டதும்

என்று, கடம்பூர்கரக் கோயிலைக் கூறுகிறார்.

திருக்கருப்பரியலூர் சிவன் கோயில் கொகுடிக் கோயில் அமைப்பாக இருந்ததென்று கூறுகிறார். கொகுடிக்கோயில் என்னும் பெயரை அப்பதிகத்தின் பதினொரு செய்யுளிலும் கூறுகிறர்.

திருக்கச்சூரில் உள்ள கோயில் ஆலக்கோயில் என்று கூறுகிறார். ஆலக்கோயில் என்பது ஆனைக் கோயில். அதனை கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும் கூறவார்.2

நன்னிலத்துக் கோயிலும், திருக்கலைய நல்லூர் கோயிலும் பெரும் கோயில் என்று கூறுகிறார்.

66

‘தண்கமலப் பொய்கை புடைசூழந் தழகார் தலத்தில் தடங்கொள் பெருங்கோயில்தனில் தக்கவகையாலே' என்றும்,

993

"மண்டபமும் கோபுரமும் மாளிகையும் சூளிகையும் என்றும் கூறுகிறார் நன்னிலத்துப் பெருங்கோயிலை.

  • அஞ்சிறைத்தும்பி மூன்றாம் நந்திவர்மன் (1958) நூலில் இடம்பெற்ற கட்டுரை