உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

269

சிற்ப நூல்களில் கூறப்படுகிற இளங் கோயில்களில் மூன்று விதமாக அமைப்புகள், மாமல்லபுரத்தில் அமைந்துள்ளன.

“பிடாரி இரத”ங்களில் மற்றொன்று, கிழக்கு நோக்கியிருக்கிறது. இதுவும் கருவறைப் பகுதிவரையில் செம்மையாக அமைக்கப்படாமல், மேல்புறம் மட்டும் நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றப் பாறைக் கோயில்களைப் போலவே இதுவும், மேற்புறம் மட்டும் செம்மையாக அமைக்கப்பட்டிருப்பதால் இக் கோயில்களின் விமானங்களைமட்டும் காட்டுவதற்காக இவை அமைக்கப் பட்டன என்று தோன்றுகிறது.

இந்தக் கோயிலின் விமானம் “அர்ச்சுனன் இரதம்,” “தருமராசன் இரதம்’ என்னும் கோயில்களின் விமானத்தைப்போலவே எட்டுப்பட்டையுள்ள ஸ்கந்தகாந்தம் என்னும் விமானம் ஆகும். ஆனால் அர்ச்சுனன் இரதமும், தருமராசன் இரதமும் முறையே இரண்டு மூன்று கருவறைகளையுடைய மாடக் கோயில்கள். இந்தக்கோயிலோ, மாடக் கோயில் அல்லாத ஒரே கருவறையுள்ள சாதாரணக்கோயில். ஆனால். இதன் விமானம் மூன்றுநிலை (பூமி)களுடன் அமைந்திருக்கிறது. மஞ்சத்தின்மேல் கூடகோஷ்ட பஞ்சரங்களும், அதற்கு மேலே உள்ளடங்கிய மற்றொரு நிலையில் கூட கோஷ்ட பஞ்சரங்களும், அதற்கும் உள்ளடங்கி மற்றொரு நிலையில் கூடகோஷ்டபஞ்சரங்களும் அதற்குமேல் கழுத்தும் அதற்குமேல் எண்கோண விமானமும் அமைந்து இந்தக் கோயில் எழில்பெற விளங்குகிறது.

மாடக் கோயிலாகவும் சாதாரணக் கோயிலாகவும் எவ்வாறெல்லாம் எண்கோண விமானமாகிய ஸ்கந்தகாந்தக் கோயில்களை அமைக்கலாம் என்பதைக் காட்டுவதற்காகவே சிற்பிகள் மாமல்லபுரத்தில் இந்த மூன்று கோயில்களையும் அமைத்தார்கள் போலும்.

ஒருமுறை : சிற்ப நூல்களிலே கூறப்பட்ட திராவிட அமைப்புக் கோயில்கள் மாமல்லபுரத்தில் பாறையில் அமைத்துக் காட்டப் பட்டுள்ளன. ஆனால், ஸ்ரீவிஜயம் என்னும் பெயருள்ள வட்ட வடிவமான விமானக்கோயில் அமைப்பு மாமல்லபுரத்தில் காணப் படவில்லை. ஏன் அந்தக் கோயிலின் அமைப்பு இங்கு அமைத்துக் காட்டப்படவில்லை இங்கிருக்குமானால், திராவிடக்கோயில்