உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

குண்டபல்லி கிராமம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த எல்லூர் தாலுகாவில் இருக்கிறது. இக்கிராமத்தில் இடிந்துபோன பௌத்தக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் யானைக்கோயிலும் ஒன்று. இதன் தரையமைப்பு நீண்ட அரைவட்டமாக இருக்கிறது. இதன் நீளம் 53 அடி, 7 அங்குலம். அகலம் 14 அடி, 5 அங்குலம். சுவரின் கனம் 4 அடி, 3 அங்குலம். (Plate XXI. Annual Report of Archaeology 1916-17)

கஞ்சம் மாவட்டம் சிக்ககோல் தாலுகாவில் வம்சதாரை என்னும் ஆற்றில் தென்கரையில் சாலிஉறாண்டம் என்னும் கிராமம் இருக்கிறது. கலிங்கபட்டணம் என்னும் துறைமுகத்திற்குத் தெற்கே 6 மைலில் இது இருக்கிறது. இந்தக் கிராமத்தையடுத்துள்ள குன்றின் மேலே உள்ள அழிந்துபோன பௌத்தக்கட்டடங்களில் ஒன்று யானைக்கோவிலின் தரையமைப்புடையது. இதன் நீளம் ஏறக்குறைய 24 அடி, அகலம் 12 1/2 அடி. சுவரின் கனம் 3 அடி. இக்கட்டடம் கி.பி. 7ஆ நூற்றாண்டு முன்பு கட்டப்பட்டிருக்கவேண்டும். இக்கட்டடச்சுவரில் உள்ள செங்கற்கள் 18x11x 3 அளவுள்ளன. (Annual Report of Archaeology 1919-20 P. 36. Fig 2. Plan of the Chaitya with Broken Buddha)

விசாகப்பட்டணம் மாவட்டத்தில் உள்ள விஜயநகரத்திலிருந்து வடகிழக்கே 8 மைலுக்கப்பால் இராமதீர்த்தம் என்னும் கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் வடக்கேயுள்ள குருபக்தி கொண்ட என்னும் குன்றின்மேல் இடிந்துபோன பௌத்தக் கட்டடங்கள் சில உள்ளன. அவற்றில் ஐந்து கட்டடங்கள் யானைக் கோயில்கள் இவற்றில் தரையமைப்பு அகலநீளங்கள் வருமாறு:

வது யானைக்கோயில் : இது மேற்குப் பக்கத்தில் உள்ளது. உட்புறமாக இதன் நீளம் 40 அடி, அகலம் 11 அடி. வாயிலின் அகலம் 4 அடி, சுவரின்கனம் 4 1/2 அடி. இதில் 7 அடி உயரம் உள்ள கருங்கல்லால் அமைந்த தாதுகர்ப்பம் (சேதியம்) காணப்படுகிறது.

2-ஆவது யானைக்கோயில் : இது 4 அடி 8 அங்குல உயரம் உள்ள மேடை மீது கட்டப்பட்டிருக்கிறது. நீளம் 26 அடி 9 அங்குலம். அகலம் 11 அடி 4 அங்குலம். வாயிலின் அகலம் 4 அடி 5 அங்குலம். சுவர் கனம் 2 அடி 4 அங்குலம். இதில் 9 அடி உயரம் உள்ள கருங்கல்லினால் அமைந்த சேதியம் இருக்கிறது.

2

9

3-ஆவது யானைக்கோயில் : இது மேலே கூறப்பட்டவற்றை விடச் சற்றுப் பெரியது. இதன் முன்புற வாயிலரன் அகலம் 4 அடி 10