உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ஆதிகாலத்து யானைக்கோவில், அதாவது பௌத்தக் காலத்தில் கஜபிருஷ்ட விமானக்கோயில், இப்போது முழு அமைப்போடு உள்ளவை கபோதேசுவரர் கோவிலும் திரிவிக்கிரமன் கோவிலும் பெண்ணாகடத்து யானைமாடக்கோவிலும் என்று கூறினோம் இக்கட்டடங்களின் அமைப்பை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பு இக்கோவில்களைப் பற்றிய பொதுவான சில வரலாறுகளைத் தெரிந்துகொள்வோம்.

கபோதெசுவரர் கோவில்:

ஆந்திர தேசத்துக் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டை இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 15 மைல் தூரத்தில் உள்ள சேஜர்லா கிராமத்தை யடைந்தால் அங்குக் கபோதேசுவரர் கோவிலைக் காணலாம். முற்காலத்தில் பௌத்தமதக் கோயிலாக இருந்த இது பிற்காலத்தில் சைவசமயக் கோயிலாக மாற்றப் பட்டுள்ளது. திரிவிக்கிரமன் கோவில்

இது பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்தது. இப்போதைய மகாராஷ்டிர தேசத்தில் உள்ளது. ஷோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்சி என்னும் நகரத்திலிருந்து கிழக்கே 30 மைலுக்கப்பால் தேர்னா ஆற்றின் கரைமேல் உள்ள தேர் என்னும் கிராமத்தில் இக்கோயில் இருக்கிறது. தேர் கிராமத்தின் பழைய பெயர் தகரை என்பது. தேர் என்னும் இக் குக்கிராமம் பண்டைக்காலத்தில் தகரை என்று பேர்பெற்றிருந்த வாணிகம் செழித்த நகரமாக இருந்தது. பழம்பெருமையை இழந்து இப்போது குக்கிராமமாக இருக்கிற இவ்வுரில், பௌத்தக் காலத்து யானைக்கோவில் அழியாமல் ருக்கிறது. பௌத்தக் கோவிலாக இருந்த இது பிற்காலத்தில் வைணவக் கோவிலாக மாற்றப்பட்டுத் திரிவிக்கிரமன் கோவில் என்று பெயர் கூறப்படுகிறது.

செங்கல்லினால் கட்டப்பட்ட பௌத்தக்காலத்து யானைக் கோவில்கள் அழியாமல் முழு உருவத்துடன் இருப்பவை இவ்விரண்டு கோவில்கள் மட்டுமே. இவை இரண்டும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்று கருதப்படுகின்றன.

இக்கோவில்களைச் சூழ்ந்து முன்பக்கத்திலும் சுற்றுப்புறங் களிலும் மண்டபங்களும் கட்டடங்களும் பிற்காலத்தில் புதிதாக