உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இதன் முதல்நிலை யமைப்பைப் பார்ப்போம். இதன் சுவர் அமைப்பு நீண்ட அரைவட்டமாக அமைந்து, 'அதிஷ்டானம்' என்னும் சிறு மேடையின்மேல் நிற்கிறது. சுவர்களில் இடையிடையே சுவர்களைச் சார்ந்து (திரிவிக்கிரமன்யானைக் கோவிலில் கண்டது போல) தூண்கள் அமைந்து கட்டிடத்துக்கு அழகு தருகின்றன.

இதன் இரண்டாம் நிலையின் சுவர் அமைப்பும் முதல் நிலைச்சுவர் அமைப்புப்போன்றே நீண்ட அரைவட்டமாகவும் சுவரின் டையிடையே தூண்களுடையதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால், முதல் நிலைச் சுவரைவிடச்சற்று உள்ளடங்கியிருக்கிறது. இரண்டாம் நிலையின் சுற்றுப்புறங்களில், முதல் நிலைச் சுவரையொட்டி கூடகோஷ்டபஞ்சரங்கள், அமைந்து கட்டிடத்துக்கு அழகைத்

தருகின்றன.

மூன்றாவது நிலையின் சுவர்கள் இரண்டாவது நிலைச்சுவரை விடச்சற்று உள்ளடங்கி, நீண்ட அரைவட்ட அமைப்பாக இடை யிடையே தூண்களைப் பெற்றிருக்கிறது. முன்றாம் நிலையில் சுற்றுப்புறங்களிலும், இரண்டாம் நிலையில் உள்ளதுபோலவே கடகோஷ்ட பஞ்சரங்கள் அமைத்துள்ளன. இவ்வாறு மூன்று நிலை களும் அழகுபட அமைந்துள்ளன.

மூன்றாவது நிலைக்குமேல் உள்ள விமானத் (கூரை) தின் அமைப்பு யானையின் முதுகு போன்று அமைந்திருக்கின்றது. இந்தவிமானத்தைப் பக்கங்களில் இருந்து பார்த்தால் யானைமுதுகின் தோற்றம் போன்றும் பின்புறத்திலிருந்துபார்த்தால் யானையின் பின்தோற்றம் போலவும் காணப்படுகின்றது. விமானத்தின் உச்சியில் வரிசையாகக் கலசங்கள் இருந்தன, இப்போது அவை காணப்பட வில்லை. அவை இருந்த அடையாளங்கள் மட்டும் தெரிகின்றன. இந்த விமானத்தின் முன்புறம் 'நெற்றிமுகம்' என்று பெயர் பெறும் நெற்றிமுகத்தின் மேலே, மூன்று கொம்புள்ள மனிதன் தலையுருவம் அமைந்திருக்கிறது. அது உடைந்திருக்கிறது.

விமானத்தின் முன்புறமாகிய நெற்றிமுகத்தில், மூன்று வாயில்கள் போன்ற அமைப்பும் நடுவாயிலின் மத்தியில் சேதியம் (தாகோப-தாதுகர்ப்பம்) போன்ற உருவமும் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன, கோவிலின் திருவுண்ணாழிகை (கர்ப்பக்

கிருகம்) அமைக்கப்பட்டிருந்தால், அதனுள் எழுந்தருளப்பண்ணி