உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் ஓவியம் - அணிகலன்கள்

37

கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ் சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனை களில் பொருளும் இசையும் செறியலாயின..... இந்நாளில் கலைஞரல்லா தாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவைகள் ஏழிசையால் அணிசெய்யப்படுகின்றன. அவ்வணியைத் தாங்க அவைகளால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின்தோலில் சிறிது நேரம் நின்று. அரங்கம் கலைந்ததும் சிதறிவிடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு?

இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது? புலன்களின் வழியே புகுந்து, கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்திக், குணத்துக்குரிய அகக்கண்ணைத் திறந்து, அமைதி இன்பத்தை நிலை பெறுத்துதற்கென்று இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது. இஃது இசைப்பாட்டின் உள்ளக்கிடக்கை. இதற்கு மாறுபட்டது இசைப் பாட்டாகாது.

9918

சில இசையாசிரியர்

அண்மைக் காலத்தில் தமிழிலே கீர்த்தனைகளையும் இசைப் பாடல்களையும் இயற்றி அழியாப் புகழ்பெற்ற சிலருடைய பெயரைக் கூறுவோம்:

அருணாசலக் கவிராயர், அநந்த பாரதிகள், கவிகுஞ்சர பாரதியார். கனம் கிருஷ்ணையர், இராமலிங்க அடிகள், கோபால கிருஷ்ண பாரதியார், கோடீசுவர ஐயர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், மாரிமுத்துப் பிள்ளை, மாயவரம் வேதநாயகம் பிள்ளை. முத்துத் தாண்டவராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அண்ணா ரெட்டியார் முதலியோர்.

அன்னியர் ஆட்சியில் இசைக்கலை

மலை

கி.பி. 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ்நாட்டில் அரசியல் நிலையற்றதாகி அன்னியர் ஆட்சியில்பட்டு நாட்டில் குழப்பமும் கலகமும் ஏற்பட்டிருந்தன. தெலுங்கர்களான நாயக்க சிற்றரசர்களும் மகாராஷ்டிரர்களும், முகம்மதியர்களும், பாளையக்காரர்களும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிகளைப் பிடித்துக்கொண்டு அரசாண் டனர். அன்னியராகிய இவர்கள் தமிழர் கலைகளையும் தமிழர் பண்பை யும் அறியாதவர்கள் ஆகையால், மற்றக்கலையைப் போற்றாதது