உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

“எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய எனக் கல்வெட்டின் ஈற்றிலே காணப்படுகின்ற குறிப்பினை நோக்குமிடத்துச், சுத்த மூர்ச்சனையாகவும், அந்தரங் கூடிய மூர்ச்சனையாகவும், காகலியந் தரங்கூடிய மூர்ச்சனையாகவும் அனைத்தினையும் இசைக்கலாம் என்னும் கருத்துப் பெறப்படுகின்றது. கரஹரப்பிரியா மேளத்திற்குள்ள சுத்த நரம்புகள் ஏழினையும் பெற்ற மூர்ச்சனை ‘ஏழு' எனக் குறிக்கப் பட்டது. அந்தரம் கூடியது 'எட்டு' எனவும், காகலி யந்தரம் கூடியது ‘ஒன்பது' எனவும் குறிக்கப்பட்டன. வென்றெண்ண வேண்டியிருக் கிறது. மூன்றுருவங்களிலும் தனித்தனி ஏழுபாலைகளையும் பிறப்பிக்கலாம். இப்பொருளைத் தேவாரவியல், 5 ஆம் பிரிவினுள்ளே தெளிவுபடுத்தினாம்.”5

66

'தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ்' என ஆசிரிய மாலையினுட் குறிக்கப்பட்ட ஒன்பது நரம்பினையுடைய இசைக்கருவி, குடுமியாமலைக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்திலே வழக்கிலிருந்த தென்பதற்கு அக்கல்வெட்டே சான்று பகருகின்றது. இக்கருவியிலே அந்தர காந்தாரமும், காகலி நிஷாதமும் அந்தரங் களாக நின்றன வென்பதும் கல்வெட்டினால் அறியப்படுகின்றது.

926

குடுமியாமலைக்கு அருகிலே திருமய்யம் என்னும் ஊரிலுள்ள மலையக்கோயிலின் அருகில், பல்லவர் காலத்து எழுத்தினால் எழுதப்பட்ட இசைக்கலைச் சாசனம் ஒன்று இருந்தது. பிற்காலத்துப் பாண்டியன் ஒருவன், இந்தச் சாசனத்தை அழித்துப்போட்டு அந்த இடத்தில் தன்சாசனம் ஒன்றை எழுதிவிட்டான். ஆனாலும், அழிக்கப்படாத சில எழுத்துக்கள் இன்றும் காணப்படுகின்றன. அவை,

பரிவாதினிதா

கற்கப்படுவது காண்.

ஞ்சொல்லிய புகிற் பருக்கும்நிமி

முக்கந் நிருவத்துக்கும் உரித்து

குணசேனப் பிரமாணஞ்

செய்த வித்யா பரிவாதினி கற்.

என்பன. துண்டுதுண்டாக எஞ்சியுள்ள இந்தச் சொற்களிலிருந்து இதன் பொருளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சாசனம் அழிக்கப்பட்டுப் போனபடியினாலே அக்காலத்து இசைக் கலையைப்பற்றிய செய்தியை அறிய முடியாமலிருக்கிறது. இந்தச் சாசனத்தை அமைத்தவன் மகேந்திரவர்மனே என்று கருதுகின்றனர்.