உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள் 81

அடிக்குறிப்புகள்

1. இந்தப் பெயரைத் திரு. கோபிநாதராவ் அவர்கள் தவறாகப் பொருள் கொண்டார். மகேந்திரனுடைய தாயும் தந்தையும் வெவ்வேறு ஜாதியில் பிறந்தவர்கள். என்றும் அவர்கள் கலப்பு மணம் செய்துகொண்டு பிறந்தவன் மகேந்திரவர்மன் என்றும் ஆதலால்தான் அவனுக்குச் சங்கீர்ண ஜாதி என்றும் பெயர் உண்டாயிற்று என்றும் தவறாக எழுதினார். Epi. Ind. Vol. XVII. P. 16.

திரு. கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் இதனை மறுத்து சங்கீர்ண ஜாதி என்பது தாளவகையின் ஒரு பெயர் என்று கூறினார். சங்கீர்ண ஜாதி என்பதற்குக் கலப்பு ஜாதி என்னும்பொருள் இவ்விடத்தில் பொருந்தாது. பரதர் இயற்றிய நாட்டிய சாஸ்திரம் இசையை ஜாதி என்னும் பெயரால் கூறுகிறது. ஆகையால் சங்கீர்ண ஜாதி என்னும் பெயர் இசை சம்பந்தமான பெயர் என்பது ஐயமறத் தெரிகிறது. எனவே மகேந்திரவர்மன் சங்கீர்ண ஜாதி என்னும் பெயர் பெற்றிருந்தது அவன் இசைக் கலையில் தேர்ந்தவன் என்பதைத் தெரிவிக்கிறது.

2. Epi. Rep. 1905. Page 47, Para 4.

3. Epi. Ind. Vol. XII. P. 226 - 237.

4. யாழ்நூல்: ஒழிபியல், குடுமியாமலைக் கல்வெட்டு, பக்கம் 338.

5. யாழ்நூல்: ஒழிபியல், பக்கம், 351.

6. தேவாரவியல், பக்கம், 268.