உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

குடமுழவங் கொடுகொட்டி குழலும் ஒங்க, கொக்கரையும் கொடு கொட்டியும். துடியாம் துடியின் முழக்கந்தானாம், குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை. அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும். கொக்கரை சச்சரி வீணை. கொக்கரை குழல் வீணை கொடு கொட்டி. முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே. தாளம் குழல் யாழ் குண்டிகை கொக்கரை. பரண்டை மொந்தை முழவு. கொடுகொட்டியும் கொக்கரை விரவினார் பண்கெழுமிய வீணையும். கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை. செந்துவர்வாய்க் கருங்கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார் வந்துவலஞ் செய்து மாநடமாட பண்குணத்தார் பாடலோடு ஆடலோவாப் பரங்குன்றம்.'

و,

இவ்வாறு இசையைப்பற்றியும் இசைக் கருவிகளைப் பற்றியும் இன்னும் பல குறிப்புக்கள் திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்களிலே காணப்படுகின்றன.

புறநீர்மை காந்தாரம் பியந்தைக் காந்தாரம் கவுசிகம் இந்தளம் தக்கேசி சாதாரி நட்டபாடை நட்டராகம் பழம் பஞ்சுரம் காந்தார பஞ்சமம் பஞ்சமம் என்னும் பன்னிரண்டு பகற்பண்களும், தக்கராகம் பழந்தக்கராகம் சீகாமரம் கொல்லி கொல்லிக்காவாணம் வியாழக் குறிஞ்சி மேகராகக் குறிஞ்சி அந்தாளிக் குறிஞ்சி குறிஞ்சி என்னும் ஒன்பது இராப்பண்களும், செவ்வழி செந்துருத்தி திருத்தாண்டகம் என்னும் மூன்று பொதுப்பண்களும் ஆக இருபத்து நான்கு பண்கள் இவரது தேவாரப் பதிகங்களில் பயிலப்பட்டுள்ளன. நிற்க.

மகேந்திரவர்மன் மற்றக் கலைகளைப் பயின்றது போலவே இசைக்கலையையும் பயின்று அக்கலையில் சிறந்து விளங்கினான். இவன் இசைக்கலையில் வல்லவன் என்பதை இவனுக்கு வழங்கிய “சங்கீர்ணஜாதி” என்னும் சிறப்புப் பெயரினால் அறியலாம். திருச்சியிலும் பல்லாவரத்திலும் இவன் அமைத்த குகைக் கோயில்களில் எழுதப்பட்டடுள்ள சாசனங்களில் சங்கீர்ணஜாதி என்னும் இவனுடைய சிறப்புப் பெயர் காணப்படுகிறது.'

புதுக்கோட்டையைச் சார்ந்த குளத்தூர்த் தாலுகாவில் உள்ள குடுமியாமலை என்னும் குன்றின்மேல் சிகா நாதேசுவரர் கோயில் இருக்கிறது. இது குகைக்கோயில். இக்கோயிலுக்குப் பின்புறத்தில் பாறையில் இரண்டு பிள்ளையார் உருவங்கள் செதுக்கியமைக்கப் பட்டுள்ளன. ஒன்று வலம்புரி விநாயகர்; மற்றொன்று இடம்புரி