உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

71

காஞ்சீபுரத்துக்கடுத்த ஆர்ப்பாகக்கத்து ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இசைபாடியும் வாத்தியம் வாசித்தும் இன்னிசை நிகழ்த்தியவர்கள் எழுபேருக்கு உணவுக்காக நிலம் தானம் செய்யப்பட்டது.

61

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் வீணை வாசித்த வருக்கும் இசைப்பாட்டுப் பாடியவருக்கும் தானம் வழங்கிய செய்தியை ஒரு சாசனம்கூறுகிறது.62

மாயவரம் திருமணஞ்சேரி கிராமத்தில் உள்ள கோவிலில் குடமுழா வாசித்த ஒருவரை ஒரு சாசனம் கூறுகிறது.63

திருவாவடுதுறைக் கோயிலில், புரட்டாசிமாதத் திருவிழாவில் ஏழு அங்கமுடைய ஆரியக்கூத்து ஆடின குமரன் ஸ்ரீகண்டன் என்பவருக்குக் காந்தளூர் கிராமத்தார் சாக்கைக் காணியாக நிலம் கொடுத்தார்கள்.

64

இக்கோயிலில் நானாவித நடனசாலை என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருந்தது.

உடையார் பாளையம் தாலுகா காமரசவல்லி கார்க்கோடக ஈசுவரர் கோவிலில், மார்கழி திருவாதிரை வைகாசித் திருவாதிரை களில் மும்மூன்று சாக்கைக் கூத்து ஆடுவதற்காக, சாக்கை மாராயன் விக்கிரமம் சோழன் என்னும் ஆடல் ஆசிரியனுக்கு நிலம் வழங்கப் பட்டது. 65

திருநெல்வேலி ஜில்லா திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் சோம நாதீசுவரர் கோவிலில் அழகிய பாண்டியன் கூடம் என்னும் ஆடல் மண்டபம் இருந்தது. அதில் ஆடிய சாந்திக் கூத்தனுக்கு நிலம் வழங்கப்பட்டது.

66

மிழலைநாட்டு வீரநாராயணபுரத்துக் கயிலாயமுடையார் கோயிலில், சித்திரைத் திருவிழாவின்போது ஐந்து தமிழக் கூத்து டுவதற்காக. விக்கிரமாதித்தன் திருமுது குன்றன் என்னும் விருதராஜ பயங்கர ஆசாரியன் என்பவருக்கு நிலம் தானம் செய்யப்பட்டது.67

திருக்கடவூர் திருக்கோயிலில் தலைக்கோல் ஆசானாக (நட்டுவனாக) இருந்த கலாவினோத நிருத்தப் பேரரையன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற பாரசிவன் பாரசிவன் பொன்னன் பொன்னன் என்பவருக்கு நட்டுவநிலையாக நிலம் தானம் செய்யப்பட்டது.