உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

காலத்தில், அவ்வரசன் முன்னிலையில் அகமார்க்கப் பாட்டைப் பாடினார். இதற்காக இவ்வரசன் இவருக்கு 60 வேலி நிலம் தானம் செய்தான். இந்த நிலங்கள் மணலி என்னும் கிராமத்தில் இருந்தன. அன்றியும் இக்கிராமத்துக்கு உறவாக்கின நல்லூர் என்று பெயரிட்டான். ஐஞ் ஞூற்றுவத் தலைக்கோலி என்பவர் பெயரை இன்னொரு சாசனம் கூறுகிறது.

53

உய்யவந்தாள் அழகிய சோடி என்னும் பெயருள்ள வீரசேகர நங்கை, திருவிழாக் காலத்தில் ஆடல் நிகழ்த்தியதற்காக ஒருமா நிலம் தானமாக வழங்கப்பட்டதை ஒரு சாசனம் கூறுகிறது.

54

திருவொற்றியூர் கோயிலில் தேவரடியார், பதியிலார், இஷபத்தினியார் என்று மூன்றுவகையான மகளிர் இருந்தனர். இவர்களில் பதியிலாரும் தேவரடியாரும் சாந்திக் குனிப்பம் என்னும் ஆடல் புரிந்தனர். அப்போது இஷபத்தினியார் அகமார்க்கம் வரிக்கோலம் என்னும் இசைப்பாடல்களைப் பாடினர். இஷபத்தினியார் சாந்திக்குனிப்பம் சொக்கம் என்னும் ஆடல்களை ஆடியபோது, பதியிலார் இசை பாடினார்கள் என்று சாசனம் கூறுகிறது.

55

புதுக்கோட்டையில் ஒரு கோயிலில், சித்திரைத் திருவிழாவில் ஒன்பது சாந்திக்கூத்தை ஆடுவதற்காக ஏழுநாட்டுநங்கை என்பவ ருக்கு நிலம் தானம் செய்யப்பட்டது.

56

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தாலுகா வள்ளியூரில் சாந்திக்கூத்தி ஒருவர் இருந்தார். இவர் பெயர் சாந்திக்கூத்தி சொக்கட்டா யாண்டார் என்னும் உலக முழுதுடையாள். இவள் தன் பேர்த்தி ஸ்ரீயப் பிள்ளை என்பவள் உருவத்தை வள்ளியூர் கோயிலில் செய்து வைத்தாள்.

57

புதுக்கோட்டை பொன்னமராபதி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சாசனம் ஒன்று, சீரங்க நாயகி என்பவளைப் புகழ்ந்து பாடுகிறது.58 இவள் நாட்டியக்கலையில் வல்லவள்.

திருந்து தேவன்குடி அருமருந்தீசுவரர் கோயிலில் வீணை வாசித்தவருக்கு நிலம் தானம் கொடுக்கப்பட்டது.

59

தென் ஆர்க்காடு மாவட்டம் திருமய்யம் தாலூகா கிடங்கில் என்னும் ஊரில் உள்ள கோயிலில் வீணை வாசித்தவருக்கும் வாய்ப் பாட்டுப் பாடியவருக்கும் நிலம் தானம் செய்யப்பட்டது.

60